திரையரங்கு
Chapter 42: Class 12 Advance Tamil · ADVANCED TAMIL · TA medium
Read from the source
Complete lesson
திரையரங்கு 1900இல் தென்னிந்தியாவின் முதல் திரையரங்கு, சென்னை அண்ணாசாலையில் (மவுண்ட் ரோடு) வார்விக் மேஜர் என்னும் ஆங்கிலேயரால் கட்டப்பட்டது. இதன் பெயர் எலக்ட்ரிக் தியேட்டர். 1905இல் திருச்சியில் சுவாமிக்கண்ணு வின்சென்ட் என்பவர் ‘எடிசன் சினிமாட்டோ கிராப்‘ என்ற திரைப்படம் காட்டும் நிறுவனத் தைத் தEொடங்கினார். தென்னிந்தியாவின் முதல் ‘டூரிங் டாக்கீஸ்‘ இதுவே. அதன் பிறகு கோயம்புத்தூரில் ரெயின்போ டாக்கீஸைக் கட்டிப் பல படங்களைத் தயாரிக்கவும் செய்தார். 1914இல் சென்னையில் வெங்கையா என்பவரால் ‘கெயிட்டி‘ திரையரங்கு கட்டப்பட்டது. இந்தியர் ஒருவரால் தென்னிந்தியாவில் கட்டப்பட்ட முதல் திரையரங்கு இதுவே. மௌனப்படம் டுபாண்ட் என்பவர் ஏசுநாதரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் கதைப்படத்தைக் கொண்டு வந்து பம்பாயில் காட்டினார். அந்தப் படத்தின் பெயர் ‘ஏசுவின் வாழ்க்கை‘ என்பதாகும். அந்த மௌனப்படம்தான் இந்தியாவில் காட்டப்பட்ட முதல் கதைப்படம் ஆகும். அதன்பின், சலனப்படம் அசையாத படங்களை (Still pictures) வைத்து அசைவது போன்ற பிரமையை ஏற்படுத்துவது சலனப்படம் ஆகும். ஆங்கிலத்தில் இதனை ‘மூவி‘ (Movie) என்பர். விக்டோரியா பப்ளிக் ஹால்
Related topics
Want this shaped for your exam marks?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →