generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 93poem

படைப்பு முகம்

Chapter 42: Class 12 Advance Tamil · ADVANCED TAMIL · TA medium

Read from the source

Complete lesson

படைப்பு முகம் ஜி. திலகவதி ( ): தமிழகக் காவல்துறையின் முதல் பெண் தலைமை இயக்குநராகப் பணியாற்றிய இவர், தமிழின் சிறந்த எழுத்தாளராகவும் அறியப்படுகிறார். பெண்கள் சமூகத்தின் பலதளங்களில் எதிர்கொள்ளும் அடக்குமுறைகளைப் பிரதிபலிப்பவை இவரது படைப்புகள். இவர் சிறுகதைகள், குறும்புதினங்கள், புதினங்கள், கவிதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் என 60க்கும் மேற்பட்ட படைப்புகளைப் படைத்துள்ளார். ஒரு பதிப்பாளராகவும் விளங்கி, சிறந்த உலக இலக்கியங்களைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர். படைப்பு முகம் அசோகமித்திரன் ( – ): இயற்பெயர் ஜ.தியாகராஜன். கணையாழி இலக்கிய மாத இதழில் பல ஆண்டுகளாக ஆசிரியராகப் பணியாற்றியவர். சிறுகதை, குறும்புதினம், புதினம், கட்டுரை, விமர்சனம், சுய அனுபவம் போன்ற பிரிவுகளில் நூல்களுக்குமேல் எழுதியுள்ளார். இந்திய, ஐரோப்பிய மொழிகளில் இவரது நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவரது அப்பாவின் சிநேகிதர் சிறுகதைத் தொகுப்பிற்கு ஆம் ஆண்டு சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டுள்ளது. நகரத்தின் எளிய நடுத்தர வாழ்க்கையின் ஊடாக அமைந்ததே அசோகமித்திரனின் படைப்புகள். படைப்பு முகம் ஹெப்சிபா ஜேசுதாசன் ( - ): ‘புத்தம் வீடு‘ புதினத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் ஹெப்சிபா ஜேசுதாசன். திருவனந்தபுரம் பல்கலைக்கழக ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றியவர். தமிழ் இலக்கிய வரலாற்றை நான்கு பாகங்களாக ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டுள்ளார். தமிழில் புதினங்களும் ஆங்கிலத்தில் பாரதியாரின் குயில்பாட்டை மொழிபெயர்த்ததுடன் கவிதைகள், கட்டுரைகள், சிறுவர் இலக்கியங்களையும் படைத்துள்ளார். இல் திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கம் இவருக்கு ‘விளக்கு விருது‘ வழங்கியுள்ளது. படைப்பு முகம் சா. கந்தசாமி ( ): சாயாவனம் புதினத்தின்மூலம் தமிழில் அறிமுகமானவர் சா.கந்தசாமி. இவரது படைப்புகளாக புதினங்கள், சிறுகதைத் தொகுப்புகள், கட்டுரைகள் வெளிவந்துள்ளன. கசடதபற இதழின் மூலம் புகழ்பெற்றவர்களுள் இவரும் ஒருவர். ‘சுடுமண் சிலைகள்‘ என்ற தமிழகப் பாரம்பரியக் கலைகள் பற்றிய குறும்படம் சர்வதேச விருது பெற்றது. சிற்பி தனபால், ஜெயகாந்தன், அசோகமித்திரன் ஆகியோரின் வாழ்வும் பணியும் பற்றிய குறும்படங்கள் எடுத்துள்ளார். –இல் இவரது ‘விசாரணைக் கமிஷன்‘ புதினத்திற்கு சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டுள்ளது. ஒரு துணையின்றி, நிலவு பொழியும் இரவில் தன்னந்தனியே மரம் வெட்டும் சந்தர்ப்பம் ஒருவேளை வராமலேயே போகலாம். சற்றே பின்னுக்கு வந்து, எந்த திசையில் மரம் விழுமென்று கவனித்துப் பார்த்தான். பழைய தீர்மானம் உறுதிப்பட்டது. ஆனால், ஒற்றை தென்னை தடுத்தால், தென்கிழக்காக இலுப்பை மரத்தின்மேல் விழக்கூடும். அப்படி விழுந்தால், கொஞ்சம் கஷ்டம்; வேலைப்பளு கூடும். இலுப்பையை வெட்டித்தள்ளி, பிறகு நெட்டிலிங்க மரத்தை அப்புறப்படுத்த வேண்டியிருக்கும். வடக்குப் பக்கமாக நின்று ஒரே நிதானத்தோடும் முன்னெச்சரிக்கையோடும் கோடரியை வீசினான். மரம் பெரும் இரைச்சலோடு தரையில் சாய்ந்தது. தூரத்தில் ஓடி நின்று பார்த்தான். வனம் முழுவதும் வெறிச்சோடியது மாதிரி காட்சியளித்தது. (சாயாவனம் புதினத்திலிருந்து ஒரு பகுதி) படைப்பு முகம் தகழி சிவசங்கரன் ( - ): மலையாள மொழியின் யதார்த்தவாத முற்போக்கு எழுத்தாளர்களில் முக்கியமானவர் தகழி சிவசங்கரன். இவர் மலையாள மொழியில் நாவல்களையும் 500க்கு மேற்பட்ட சிறுகதைகளையும் ஒரு நாடகத்தையும் எழுதியுள்ளார். கேரளத்தில் முற் போக்கு எழுத்தாளர் சங்கத்தை நிறுவி நிலைநாட்டியவர் தகழி. அத்துடன் கேரள சாகித்திய அகாதெமி என்ற அமைப்பை தலைமை ஏற்று திறம்பட நடத்தியிருக்கிறார். ‘ஏணிப்படி‘ என்ற புதினத்திற்கு கேந்திர சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது. 1984ஆம் ஆண்டு இவருக்கு ஞானபீட விருது வழங்கப்பட்டது. கறுத்தம்மா கவனித்தாள். பாடுவது பரீக்குட்டிதான். அவன் ஒன்றும் பாடகன் அல்ல. ஆனாலும் தEோணியின் விளிம்பில் அமர்ந்தவாறு அவன் பாடிக் கொண்டிருக்கிறான். தான் அங்கிருப்பதைத் தெரிந்து கொள்ள வேண்டியவளுக்கு பின் அதை எப்படித்தான் தெரிவிப்பது. தெரிந்து கொள்ள வேண்டியவள் தெரிந்து கொண்டுவிட்டாள். எட்டவேண்டிய இடத்தை எட்டிவிட்டது. கறுத்தம்மாவுக்கு இருக்கை கொள்ளவில்லை. யாரும் அறியாமல் இறங்கிச் சென்று விட்டால்? போகவேண்டிய இடமோ தEோணிமறைவு. ஆபத்தான இடம். அவன் பாடிய பாடல் கடல்மே ல் செல்லுகிற செம்படவர்கள் பாடுகிற பாட்டுத்தான். சிறிதுநேரம் செவிசாய்த்து இருந்துவிட்டோமென்றா ல் தானாகவே எழுந்து இறங்கிச் சென்று விடுவோமோ என்றுகூடக் கறுத்தம்மா பயந்தாள். விரல்களைக் காதினுள் திணித்துக் கொண்டாள். அதன்பின்பும் அப்பாடல் அவளுள்ளே ஊடுருவிச் செல்லத்தான் செய்தது. (செம்மீன் புதினத்திலிருந்து ஒரு பகுதி) ஞானபீட விருது (Jnanpith Award ) என்பது இந்தியாவில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் உயரிய விருதாகும். இவ்விருது, பாரதிய ஞானபீடம் என்ற பண்பாட்டு இலக்கியக் கழகத்தால் வழங்கப்படுகிறது. இது 1961இல் சாகு சாந்தி பிரசாத் ஜெயின் குடும்பத்தினரால் நிறுவப்பட்டது. 1965இல் முதன் முதலாக மலையாள எழுத்தாளர் ஜீ. சங்கர குருப்பிற்கு இவ்விருது வழங்கப்பட்டது. ‘முதல் சத்தியம்‘ என்ற புதினத்திற்காக இந்த விருதைப் பெற்ற முதல் பெண் எழுத்தாளர் ஆஷா பூர்ணாதேவி. ஓர் எழுத்தாளரின் சிறந்த படைப்பிற்காக 1982ஆம் ஆண்டு வரை ஞானபீட விருது வழங்கப்பட்டது. அதன் பின்னர் ஓர் எழுத்தாளரின் வாழ்நாளில் அவர் இலக்கியத்திற்கு ஆற்றிய பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட மொழிகளுள் சிறந்த எழுத்தாளருக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. தமிழில் 1975இல் சித்திரப்பாவை புதினத்திற்காக அகிலனும், 2002இல் இலக்கியத்திற்கு ஆற்றிய பங்களிப்பிற்காக ஜெயகாந்தனும் இவ்விருதைப் பெற்றுள்ளனர். படைப்பு முகம் மார்க்ஸிம் கார்க்கி ( – ): உலகப்புகழ் பெற்ற இலக்கியப் படைப்பாளர்கள் வரிசையில் முன்நிற்பவர் மாக்சிம் கார்க்கி. இவர் ரஷ்யாவிலுள்ள நிழ்னி நோவோகார்டு என்னும் இடத்தில் பிறந்தார். இயற்பெயர் அலெக்ஸி மாக்சிகொவிச் பெஸ்கோவ். இவர் எழுதிய தாய் என்னும் புதினம் உலகப்புகழ் பெற்றது. இவர் செருப்புத் தைப்பது, மூட்டை தூக்குவது, மண்பாண்டம் செய்வது, வேட்டையாடுவது, ரயில் பாதை காவலன், மீன்பிடித்தொழில் செய்வது, இடுகாட்டுக் காவலன், பிணம் சுமத்தல், நாடக நடிகன், பழ வியாபாரி என பலதரப்பட்ட வேலைகளையும் செய்தவர். வாழ்க்கையின் வறுமையான பக்கங்களைத் தாம் அனுபவித்ததால்தான் உலகச் சிறப்புமிக்க உன்னத காவியத்தை அவரால் படைக்க முடிந்தது. ரஷ்யப் புரட்சியாளர் லெனினுடன் ஏற்பட்ட தொடர்பால் இருவரும் நெருங்கிய நண்பர்களாயினர். ஒரு மகனை நேசிப்பதைப்போல் லெனின் கார்க்கியை நேசித்தார். லெனின் புரட்சி நிதிவேண்டி கார்க்கியை அமெரிக்காவுக்கு அனுப்பினார். அங்கு அகிரோந்தாக் மலைப்பகுதியில் அமர்ந்து அவரால் எழுதப்பட்டதுதான் ‘தாய்‘ புதினம். கார்க்கி ஏராளமான நூல்களை எழுதியிருந்தாலும் உலகத்தை ரஷ்யாவின் பக்கம் திரும்பச் செய்தது இந்தப்புதினம்தான். “ஆனால், நாங்கள் அனைவரும் என்றோ ஒருநாள் சிறைக்குத்தான் போவோம். நீயும் இதைத் தெரிந்து வைத்துக்கொள்.“ அவளது கைகள் நடுங்க ஆரம்பித்தன. “ஆண்டவன் அருளிருந்தால் நீங்கள் எப்படியாவது தப்பித்து விடுவீர்கள் இல்லையா?“ என்று அமுங்கிப்போன குரலில் கேட்டாள். “முடியாது“ என்று மெதுவாகச் சொன்னான் அவன். “நானுன்னை ஏமாற்ற விரும்பவில்லை. தப்பிக்கவே முடியாது!“ அவன் புன்னகை செய்தான். “சரி, நீ மிகவும் களைத்திருக்கிறாய். போ, படுக்கப்போ. நல்லிரவு!“. பாவெல் சென்ற பிறகு, தன்னந்தனியாக நின்ற தாய் ஜன்னலருகே வெளியே பார்த்தவாறே நின்று கொண்டிருந்தாள். ஜன்னலுக்கு வெளியே மூட்டமாய் குளிராய் இருந்தது. தூங்கி வழிந்து கொண்டிருந்த வீட்டுக் கூரைகளின்மீது படர்ந்துள்ள பனித்துகள்களைக் காற்று விசிறியடித்து வீசியது: அந்த ஊதைக்காற்று சுவர்களில் மோதி அறைந்து, தரையை நோக்கி வீசும்போது கோபாவேசமாய் ஊளையிட்டது; சிதறிக் கிடக்கும் பனிப்படலங்களை தெருவழியே விரட்டியடித்துக் கொண்டு பின்தொடர்ந்தது. (தாய் புதினத்திலிருந்து ஒரு பகுதி) ஆல்பிரட் நோபலின் பெயரில் 1895ஆம் ஆண்டு நோபல் அறக்கட்டளை நிறுவப்பட்டது. இது சுவீடிய அரசு கல்விக்கழகத்தாலும் கரோலின்கா நிறுவனத்தாலும் நார்வே நோபல் குழுவாலும் தனியொருவருக்கோ நிறுவனங்களுக்கோ வழங்கப்படுகிறது. 1901ஆம் ஆண்டு முதல் வேதியியல், இயற்பியல், இலக்கியம், அமைதி, மருத்துவம் ஆகிய துறைகளில் பெரும்பங்களிப்பு நல்கியவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகின்றது. 1968ஆம் ஆண்டிலிருந்து பொருளியலுக்கான நோபல் நினைவு பரிசும் வழங்கப்பட்டு வருகின்றது. இரவீந்திர நாத் தாகூர் 1913ஆம் ஆண்டு தமது ‘கீதாஞ்சலி‘ என்ற நூலுக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசைப் பெற்றார்.

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →