generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 67grammar_exercise

கதை முகம்

Chapter 42: Class 12 Advance Tamil · ADVANCED TAMIL · TA medium

From your actual textbook ✓

What does your textbook say about கதை முகம்?

கதை முகம் : கட்டட த் தEொழிலாளர்களின் அசலான வாழ்க்கையை அவர்களுடனே தங்கி இருந்து களஆய்வின் மூலம் ஆசிரியரால் எழுதப்பட்டது இப்புதினம். வீடு என்ற சொல்லுக்குப் பின்னால், நமக்குள் அலையலையாய் எழும்புகிற நினைவுகளில் ஓரிடத்தில்கூட கட்டடத் தEொழிலாளர்கள் வருவதில்லை. அவர்களது வாழ்க்கைப்பாடுகளையும் அவர்களின் மீதான உழைப்புச் சுரண்டலையும் அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகளையும் இப்புதினத்தில் தன்னார்வத் தEொண்டராக வரும் சுசீலா கதாபாத்திரத்தின் வழியாகத் திலகவதி பேசுகிறார். இந்நாவலுக்கு 2005ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது.

📖 Class 12 Advance Tamil 2024 Edition www.tntextbooks.in · Page 67

Read from the source

Complete lesson

கதை முகம் : கட்டட த் தEொழிலாளர்களின் அசலான வாழ்க்கையை அவர்களுடனே தங்கி இருந்து களஆய்வின் மூலம் ஆசிரியரால் எழுதப்பட்டது இப்புதினம். வீடு என்ற சொல்லுக்குப் பின்னால், நமக்குள் அலையலையாய் எழும்புகிற நினைவுகளில் ஓரிடத்தில்கூட கட்டடத் தEொழிலாளர்கள் வருவதில்லை. அவர்களது வாழ்க்கைப்பாடுகளையும் அவர்களின் மீதான உழைப்புச் சுரண்டலையும் அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகளையும் இப்புதினத்தில் தன்னார்வத் தEொண்டராக வரும் சுசீலா கதாபாத்திரத்தின் வழியாகத் திலகவதி பேசுகிறார். இந்நாவலுக்கு 2005ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது.

கதை முகம் இயல்பான வாழ்வில் ஏற்படும் சிறுசிறு பிரச்னைகளால் பதற்றமும் அவநம்பிக்கையும் கொண்டு, அதன் விளைவாக மன அழுத்தத்திற்கு ஆளாகி, ஒரு கட்டத்தில் மனநோயாளியாகவே ஆகிப்போகும் ஒரு பெண்ணின் கதை. வாழ்வின் சிறுசிறு பிரச்னைகளை நேர்மறையாக எதிர்கொள்ளவேண்டும். அத்தகைய மனப்பாங்கே நாம் கற்பிதமாக எண்ணிக்கொள்ளும் எதிர்மறையான விளைவுகளை மாற்றப் போதுமானது என்பதைச் சம்பவங்களின் வாயிலாக இக்குறும்புதினத்தில் காட்டுகிறார் அசோகமித்திரன். “நிம்மி!“ பங்கஜம் கூப்பிட்டது வீடு முழுக்கக் கேட்டது.

சமையலறையிலிருந்து அம்மா சுருக்கமாகப் பதில் சொன்னாள்: “அவ குளிச்சிண்டிருக்கா.“ பங்கஜம் தன் கணவரின் மேஜை டிராயரை முழுவேகத்துடன் மூடினாள். மேஜை விளிம்பில் தEொத்திக் கொண்டிருந்த மைப்புட்டி புரண்டது. அது கீழே விழுவதற்குள் சட்டென்று கைநீட்டி அதைப்பிடித்து நிறுத்தினாள். அதற்காகக் காத்திருந்தது போல அவளது நாடித்துடிப்பு சீறிக்கொண்டு உயர்ந்தது.

பங்கஜம் கண்களை மூடினாள். ஒருகணம் அந்த அறையே அசைந்து அசைந்து சுழல்வது போலிருந்தது. பங்கஜம் மேஜையைப் பிடித்தவண்ணம் எழுந்து நின்றாள். இனி இந்தப் படபடப்பு அடங்குவதற்கு அரைமணி நேரமாவது ஆகும்.

அம்மா கீரை நறுக்கிக் கொண்டிருந்தாள். அவள் ஒரு பூகம்பத்தை எதிர்பார்த்திருப்பது பங்கஜத்துக்குத் தெரிந்தது. அவள் அம்மா பக்கத்தில் போய் நின்று கொண்டாள். அவளால் இயன்ற அளவு அமைதியான குரலில் “இந்த நிம்மி ஏம்மா இப்படி இருக்கா?“ என்று கேட்டாள்.

நல்லவேளையாக அம்மா பதிலேதும் தரவில்லை. இன்னும் கவனமாகக் கீரையை நறுக்கினாள். “அம்மா…“ இப்போது அம்மா தலையை நிமிர்த்திப் பார்த்தாள். பங்கஜம் அவள் பக்கத்தில் உட்கார்ந்தாள்.

“அம்மா, நிம்மியை அவருடைய டிராயரைக் குடைய வேண்டாம்னு சொல்லேம்மா“ “நிம்மிதான் குடைஞ்சிருக்காளா?“ “இல்லேன்னா வேறு யாரும்மா அவர் டிராயரைத் திறக்கப்போறா? இன்னிக்குக் காத்தாலேகூட எல்லாத்தையும் ஒழுங்கா அடுக்கி வைச்சிட்டுப் போயிருக்கார். அதுக்குள்ளே இவ கலைச்சுப் போட்டிருக்காளே“ “அவ எதுக்குக் கலைச்சுப் போடப்போறா?“ பங்கஜம் ஒருகணம் தயங்கினாள். பிறகு மெதுவாக, “அவ சில்லறை எடுக்கிறா!“ என்றாள்.

அம்மா கீரை நறுக்குவது ஒருகணம் நின்றது. அவள் மறுபடியும் நறுக்கத் தEொடங்கியபோது ஒரு சொட்டுக் கண்ணீர் நறுக்கிய கீரைமீது விழுந்தது. பங்கஜம் அம்மாவின் தE ளைப் பிடித்துக் கொண்டாள். “அழவிடறதுக்கா அப்பா போனப்புறம் உங்களை இங்கே கொண்டுவந்து வைச்சிண்டிருக்கேன்?

“ சிறிது நேரம் கீரைநறுக்கும் சப்தம் மட்டும் வந்து கொண்டிருந்தது. நிம்மி குளித்துவிட்டு வந்தாள். அம்மாவையும் பங்கஜத்தையும் ஒரு பார்வையில் பார்த்துவிட்டு முன்னறைக்குச் சென்றாள். பங்கஜம் அம்மாவின் காதEோரமாகச் சொன்னாள்: “அம்மா நான் அவளைப்போய் கதை முகம் எளிய மொழியில் சொல்லப்பட்ட வெறும் அன்பின் கதையாக மட்டுமல்லாது, யுகமாற்றத்தின் குறியீடாகத் தோற்றம்கொள்ளும் நாவல்.

லிஸியும் தங்கராஜூம் இளம்பருவத்தில் கொண்ட ஈர்ப்பு, காதலாக முதிர்ந்து திருமணத்தில் கனிய நீண்ட காலம் காத்திருக்கிறார்கள். தடைகளைக் கண்டு அஞ்சுகிறார்கள். இறுதியில் இணைகிறார்கள். முதல் சந்திப்புக்கும் முதல் நெருக்கத்துக்கும் இடையில் வருடங்கள் கடந்து போகின்றன.

இடங்கள் மாறுகின்றன. மனிதர்கள் கடந்து போகிறார்கள். அவர்கள் உறவாடுகிறார்கள். குலப்பெருமை பேசும் பண்பற்றவர்களாக இருக்கிறார்கள்.

புதிய தலைமுறையோடு பிணங்குகிறார்கள். காலத்துக்கேற்ப மாறுகிறார்கள். இது லிஸியின் கதை. மூன்று தலைமுறைகளை இணைக்கும் கண்ணி அவள்.

அவளை மையமாகக் கொண்டு விரியும் கிராம உறவுகளின் கதை. படைப்பு இயல்பால் தன்னை நிலைநிறுத்திக்கொண்ட இலக்கிய ஆக்கங்களில் ஒன்று. புத்தம் வீடு கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்கு முன்பு எழுதப்பட்டது. எனினும் இன்னும் வாசிப்பில் சுவை குன்றாமல் துலங்குகிறது.

கதை முகம் சுற்றுச்சூழல் பற்றி அதிகமும் பேசப்படாத காலத்தில், காடுகளின்மீது மனிதன் நடத்திய அழிவை மையமாக வைத்து, தஞ்சை மாவட்டக் கிராமமான சாயாவனத்தின் பின்னணியில் எழுதப்பட்டது இந்தப் புதினம். சுருக்கமான நேரடி மொழியில் எழுதப்பட்டுள்ள இது, தமிழின் மிக முக்கியமான ஒன்று. இன்றைய சூழலுக்கும் பொருத்தமான வாசிப்பனுபவத்தைத் தருகிறது. ஒளி வீச்சில் அழகிய இனிமை வாய்ந்த பொழுது மெல்ல மெல்ல உருவாகிக் கொண்டிருந்தது.

சிதம்பரம் வனத்திற்குத் தன்னந்தனியே சென்றான். அவன் வெட்டிச் சாய்த்த செடிகள் வாடிச் சோர்ந்து கிடந்தன. காரைகூட வதங்கிக் கொண்டு வந்தது. எதிர்பார்த்தற்கு மாறாகக் காரியங்கள் நடந்தத ல் அவன் மகிழ்ச்சியுற்றான்.

இயற்கை பல விதங்களில் தனக்கு மிகுந்த அனுசரணையாக இருப்பது போல தEோன்றியது. சிதம்பரம், கொடிகள் காலில் பின்ன நடந்து சென்று பக்கத்திற்கொன்றாய்ச் சிதறிக்கிடந்த அலக்கு, தEொரட்டி, அரிவாள், மண்வெட்டி – எல்லாவற்றையும் கொண்டு வந்து ஓரிடத்தில் வைத்துவிட்டு மீண்டும் வேலையைத் துவக்கினான். காட்டாமணக்கைவிட, ஆடாதEொடையை விட, குத்துக்குத்தாகத் தாழ்ந்தும் உயர்ந்தும் வளரும் கள்ளியையும் சப்பாத்தியையும்விட, காரைதான் வனம் முழுவதும் வியாபித்திருந்தது. ஒவ் வொரு மரத்தின் கீழும் காரை பெருகி வளர்ந்து தழைத்துப் படர்ந்திருந்தது.

கொடிமாதிரி ஒரு முடிவின்றி வனம் முழுவதையும் தன்னுடைய ஆதிக்கத்திற்கு கொஞ்சம் கொஞ்சமாகக் கொண்டுவந்து விட்டது. இயற்கையின் அதிசயப் போக்கு அது. வாழ்க்கைப் போராட்டத்தில் வெற்றிவாகை சூடிய காரையைச் சற்றே வளைத்துச் சின்ன முட்கள் கீறிக் கிழிக்க வெட்டிச் சாய்த்துக் கொண்டு போனான் சிதம்பரம். வரவர செடிகொடிகளோடு போராடுவது அவனுக்கு எளிமையாகிக் கொண்டு வந்தது.

கொஞ்சம் கொஞ்சமாக அவைகளின் நெளிவு சுளிவுகளையெல்லாம் அவன் தெரிந்து கொண்டு விட்டான். எப்படி வளைத்துப் பிடித்தால் ஒரே வெட்டில் காரை சாயும் என்பது அத்துபடியாகி விட்டது. ஆடாதEொடையை வெட்டுவது மாதிரி ஒருவித முயற்சியுமின்றிக் காரையை வெட்டிச்சாய்த்தான். அவனுடைய சக்தியைப் பலவீனப்படுத்திக் கொண்டிருந்த காரை, படிப்படியாக அதே கர்வத்தோடும் பெருமிதத்தோடும் சரணடையத் தEொடங்கியது.

காரைக்கு இடையே ஈச்சம் பரப்பு; ஈச்சனின் வீச்சு வீச்சாய் மட்டைகள்; ஒவ் வொரு சிறு இலையின் முனையிலும் கரும்சிவப்பு முட்கள். ஒரு புதுமையான பரப்பு; தEொடர்ந்து வெகுதூரம் வரையில் சென்று கொண்டிருந்தது. ஒரு வண்ண மாற்றம்; பூமாதேவி தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறாள்; எவ்வளவு கவர்ச்சிகரமான மாற்றம்! ஈச்சனைத் தாழ வளைத்து வெட்டும்போது அரிவாள் அவன் இடது கையில் பாய்ந்தது.

வலுவான, ஆழமான வெட்டு. ரத்தம் குபுகுபுவென்று வந்தது. முகத்தைச் சுளித்து, வலியை மிகுந்த பிரயாசைப்பட்டு அடக்கிக் கொண்டு – வாயில் கையை வைத்து ரத்தத்தை கதை முகம் கேரள மாநிலத்தின் கடலோர மீனவ சமுதாய மக்களின் நம்பிக்கைகள், வாழ்க்கைப் பாடுகள் ஆகியவற்றின் ஊடாக கறுத்தம்மா, பரீக்குட்டி இருவரின் அன்பின்மீது கட்டப்பட்ட கதை. நம்பிக்கைகளுக்கும் உறவுகளுக்கும் இடையே யான உளவியல் சிக்கல்களை நுட்பமாகப் பேசிச் செல்லும் இப்புதினம், இல் சாகித்திய அகாதெமி விருதினைப் பெற்றது.

செம்மீன் என்ற பெயரிலேயே திரைப்படமாகவும் வெளிவந்து மிகுந்த வெற்றியைப் பெற்றது. “ எங்கப்பா தE ணியும் வலையும் வாங்கப்போறாரே!“ “உன் அதிர்ஷ்டம்“ கறுத்தம்மாவுக்கு வாயடைத்துப் போய் விட்டது. தனது நிலைமையைச் சமாளித்துக் கொண்டு பேசினாள்; “ஆனா பணம் கொஞ்சம் குறையிது. எங்களுக்குக் கொஞ்சம் பணம் கொடுப்பியா?“ “என் கையில் ஏது பணம்?“ என்று தன் கைகளை விரித்துக் காட்டினான் பரீக்குட்டி.

கறுத்தம்மா சிரித்தாள். “பின்ன எதுக்காகப் பெரிய முதலாளீன்னு சொல்லிக்கிட்டு இருக்கிறாயாம்?“ “நீ ஏன் என்னைச் சின்ன முதலாளீன்னு கூப்பிடுறே?“ “பின்னே எப்படிக் கூப்பிடணும்?“ “பரீக்குட்டின்னு கூப்பிடணும்“ கறுத்தம்மா “பரீ“ என்பது வரையிலும் சொல்லிவிட்டுச் சிரித்தாள். தனது முழுப்பெயரையே சொல்லும்படி பரீக்குட்டி அவளிடம் கேட்டுக் கொண்டான். கறுத்தம்மா சிரிப்பை அடக்கி முகத்தில் கௌரவ பாவத்தை வரவழைத்துக் கொண்டு, “மாட்டேன்“ என்று தலையசைத்துவிட்டுச் சொன்னாள்; “நான் கூப்பிட மாட்டேன்“ “அப்படியானா நானும் கறுத்தம்மான்னு கூப்பிட மாட்டேன்“ “பின்னே எப்படிக் கூப்பிடப் போறே?“ “நான் உன்னே பெரிய மரக்காத்தீன்னு கூப்பிடுவேன்“ குபீரென்று சிரித்தாள் கறுத்தம்மா.

பரீக்குட்டியும் வாய்விட்டுச் சிரித்தான். நெடுநேரம் சிரித்தார்கள். அப்படி எதற்குத்தான் சிரித்தார்களோ? ஏனோ அடக்க முடியாமல் சிரித்தார்கள்!

“ அது சரி, தE ணியும் வலையும் வாங்கினா, தEோணி மீனை எனக்கு விலைக்குப் போடணும்னு உன் அப்பாக்கிட்டே சொல்லுவியா?“ “ நல்ல விலை கொடுத்தால் மீன் கொடுப்போம்“ மீண்டும் குபீரென்று! இத்தனை தூரம் சிரித்து மகிழ இந்தப் பேச்சில் என்ன இருக்கிறது! இது என்ன ஒரு பிரமாதமான ஹாஸ்யமா? பேச்சுக்குப் பேச்சு ஒருவரால் வாய்விட்டுச் சிரிக்க முடியுமா?

சிரிசிரியென்று சிரித்ததில் கறுத்தம்மாவின் கண்களில் நீர் முட்டிவிட்டது. மூச்சுத் திணற அவள் கதை முகம் உலகம் முழுவதும் பதிப்பிக்கப்பட்டு, கோடிக்கணக்கானவர்களால் வாசிக்கப்பட்ட புதினம் கார்க்கியின் தாய். சுரண்டப்படும் தEொழிலாளி வர்க்கமும் நிர்கதியான விவசாயிகளும் இளைஞர்களும் கொஞ்சம் கொஞ்சமாக நெஞ்சில் கனல் மூண்டு, ஒரு மகத்தான புரட்சியை நோக்கி எப்படி எழுச்சி பெறுகிறார்கள் என்பதை சிறந்த கதையம்சத்தோடு கார்க்கி இதில் தீட்டியிருக்கிறார். ஒரு மாபெரும் புரட்சியில் பெண்கள் செய்யும் தியாகங்கள் அவர்களின் பங்கினைப் பற்றி நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துகிறது இந்தப் புதினம்.

தாய் புதினம் மனிதனை மானுடப்படுத்தி ஒரு புதிய சமூகத்தை நிர்மாணிப்பதில் இலக்கியம் வகிக்கின்ற மகத்தான பங்கினை நமக்கு உணர்த்துகிறது. கலைநயம் மிக்க மிக நுட்பமான கருத்துப்பதிவு இந்தப் புதினம். இது உழைக்கும் மக்களின், வெகுஜனங்களின் மத்தியில் வாசிக்கும் அனைவரது மனதிலும் தனது ஆழமான வேர்களைப் பதித்துள்ளது. கார்க்கி அதையும் ஒரு தாயின் குரலாகப் பதிவு செய்திருப்பதுதான் இப்புதின வெற்றியின் ரகசியமாகும்.

அதனால்தான் இது காலங்களைக் கடந்து நிலைத்து நிற்கிறது.

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →