generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 141poem

பாடலுக்கு முதன்மை

Chapter 42: Class 12 Advance Tamil · ADVANCED TAMIL · TA medium

Read from the source

Complete lesson

பாடலுக்கு முதன்மை தமிழ்நாட்டில் பேசும்படம் தEோன்றியதும் தமிழ் நாடகங்களில் இருந்த பாடத் தெரிந்த நடிகர்கள், வசனகர்த்தாக்கள், இசையமைப்பாளர்கள் முதலிய கலைஞர்கள் திரைப்படங்களை நாடினர். அக்காலகட்டத்தில் வெளிவந்த திரைப்படங்களில் பெரும்பாலும் மேடை நாடகத் தன்மையே மேலோங்கியிருந்தது. பாட்டும் இசையும் தொடக்க காலத் திரைப்படங்களின் முதன்மை கூறுகளாக விளங்கின. ஒரே படத்தில் , பாடல்கள் இருப்பது சிறப்பான நிலையாகக் கருதப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்டது. அக்காலத் திரைப்படங்கள் பாடலுக்கே முதன்மை தந்தன. அதனால் பாடும் திறமை பெற்றவர்களே நடிகர்களாக வரமுடிந்தது. விடுதலை உணர்வு நாடக மேடைகளில் சுதந்திர வேட்கை கொழுந்துவிட்டு எரிந்த சூழலில், திரைப்படக் கதாபாத்திரங்கள் பேசும் வசனங்களின்மீதும் கவனம் செலுத்தப்பட்டது. இராஜாஜி முதல்வராக இருந்த இக்காலத்தில் தணிக்கை முறை விலக்கி வைக்கப்பட்டது. இக்காலகட்டத்தில்தான் தியாக பூமி, மாத்ருபூமி, விமோசனம், தேச முன்னேற்றம் போன ற நாட்டுப்பற்றைப் போற்றும் தமிழ்த் திரைப்படங்கள் வெளிவந்தன. வசனத்திற்கு முக்கியத்துவம் எல்லிஸ் ஆர். டங்கன் தமிழ்த் திரைப்படங்களில் , பாடல்கள் என்றிருந்த நிலையை மாற்றி ஆறு அல்லது எட்டுப் பாடல்களாகக் குறைத்தார். வெளிப்புறப் படப்பிடிப்பை அதிகம் பயன்படுத்தினார். ஹாலிவுட் பாணியில் கதைகூறும் முறையை த் தமிழ்ப் படங்களில் அறிமுகப்படுத்தியவரும் இவரே. இம்முறையைப் பயன்படுத்தி எடுக்கப்பட்ட தமிழ்த் திரைப்படங்கள் இசைக்கும்,

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →