புராணக் கதைகள்
Chapter 42: Class 12 Advance Tamil · ADVANCED TAMIL · TA medium
Read from the source
Complete lesson
புராணக் கதைகள் தE டக்கக்காலத் தமிழ்ப்படங்கள் புராணக்கதைகளை அடிப்படையாகக் கொண்டே எடுக்கப்பட்டன. அதிலும், கம்பெனி நாடகங்கள் மூலம் வரவேற்பு பெற்ற இராமாயண, மகாபாரத கதைகளே படமாக்கப்பட்டன. முதல் சமூக சீர்திருத்தக் கருத்து களைக் கதைகளாகக் கொண்ட படங்கள் வெளிவந்தன. கௌசல்யா என்ற திரைப்படம் இக்கதையமைப்பில் வெளிவந்த முதல் திரைப்படமாக அறியப்படுகிறது. இதையடுத்து, வடுவூர் துரைசாமியின் மேனகா, காசி விஸ்வநாதரின் டம்பாச்சாரி ஆகிய படங்கள் இவ்வகையில் தயாரிக்கப்பட்டன. ஆங்கிலேயரின் காலத்தில் காவல் ஆணையரின்கீழ் செயல்பட்ட தணிக்கைத் துறை ஒத்துழையாமை இயக்கத்தால் தன் சட்டங்களைக் கடுமையாக்கியது. அதனால், சில படங்கள் தயாரிப்பு நிலையிலேயே கைவிடப்பட்டன. தேசியக் கருத்துகளையோ, காந்திய சமூக சீர்திருத்தங்களையோ ஆதரிக்கும் காட்சிகள் வெட்டப்பட்டன. எனவே, புராணக்கதைகளும், மாயாஜாலக் கதைகளுமே பெரிதும் தயாரிக்கப்பட்டன.
Related topics
Want this shaped for your exam marks?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →