generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 137poem

பரீ க் ஷா

Chapter 42: Class 12 Advance Tamil · ADVANCED TAMIL · TA medium

Read from the source

Complete lesson

‘பரீ க் ஷா, ‘ என்னும் நாடகக்குழு ஞாநியால் 1978ஆம் ஆண்டு சென்னையில் தEொடங்கப் பட்டது. நவீன நாடகங்களில் சோதனை முயற்சிகளை மேற்கொண்டதால் இக்குழு ‘பரீ க் ஷா‘ என்னும் பெயரைப் பெற்றது. முதன்முதலில் ந.முத்துசாமியின் ‘நாற்காலிக்காரர்‘ என்ற நாடகத்தை மேடையேற்றியது. இந்திரா பார்த்தசாரதியின் ‘போர்வை போர்த்திய உடல்கள்‘, அம்பையின் ‘பயங்கள்‘, அறந்தை நாராயணனின் ‘மூர்மார்க்கெட்‘, பிரபஞ்சனின் ‘முட்டை‘, ஞாநியின் ‘பலூன்‘, ‘நாங்கள்’ அ.ராமசாமியின் ‘பல்லக்குத்தூக்கிகள்‘ முதலான நாடகங்கள் பரீ க் ஷா, நாடகக்குழுவின் மூலம் அரங்கேற்றம் செய்யப்பட்டன. பாதல் சர்க்கார், பெர்டே ல்ட் பிரெக்ட், விஜய் டெண்டுல்கர் போன்றோ ரின் பிறமொழி நாடகங்களையும் மேடையேற்றியுள்ளது. சென்னைக் கலைக்குழு சென்னைக் கலைக்குழு எழுத்தறிவு மற்றும் அறிவியல் பிரச்சார நாடகங்களை நடத்தும் நோக்கத்தோடு பிரளயனால் தEொடங்கப்பட்டது. எளிமையும் கிராமியத் தன்மையும் சமூக விமர்சனங்களும் கொண்ட நாடகங்களை நடத்தி வருகின்றது. சென்னைக் கலைக்குழுவினர், ‘வள்ளியின் வழக்கு‘, ‘கொள்ளி வை‘ ஆகிய இரு வீதி நாடகங்களை நடத்தினர். பல்கலையரங்கம் பல்கலைக்கழக மாணவர்களிடையே அரங்க ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் உருவாக்கும்

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →