சங்கீத நாடக அகாதெமி
Chapter 42: Class 12 Advance Tamil · ADVANCED TAMIL · TA medium
Read from the source
Complete lesson
சங்கீத நாடக அகாதெமி ‘சங்கீத நாடக அகாதெமி‘ (Sangeet Natak Akademi) இந்திய அரசால் நிகழ்த்து கலைகளுக்காக நிறுவப்பட்ட தேசியளவிலான அமைப்பாகும். 1952ஆம் ஆண்டு புதுடெல்லியில் உருவான இவ்வமைப்பு இந்தியக் கல்வி அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வந்தது. தற்போது இந்தியப் பண்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இது இசை, நாட்டியம், நாடகம் ஆகிய கலைகளை ஊக்குவிப்பதே இதன் குறிக்கோள். சங்கீத நாடக அகாதெமியின் திட்டத்தில் தயாரிக்கப்பட்ட நாடகங்கள் அந்தந்த மாநிலத்தின் பாரம்பரியத்தையும் புராண இதிகாசக்கூறுகளையும் மேடையேற்றின. யுனெஸ்கோவின் உதவியோடு டில்லியில் இயங்கி வந்த ‘பாரதிய நாட்டிய சங்கம்‘ (Bharathiya Natya Sangh) என்ற அமைப்பு -இல் ‘ஆசிய அரங்க நிறுவனம்‘ (Asian Theatre Institute) என்ற அமைப்பை ஏற்படுத்தியது. பின்னர் -இல் இந்த நிறுவனம் மைய அரசின் சங்கீத நாடக அமைப்போடு இணைக்கப்பட்டு ‘தேசிய நாடகப்பள்ளி‘ (National School of Drama) என்று பெயர் மாற்றம் பெற்றது. இப்பள்ளி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த இனம், மொழி பேசும் மக்கள் நாடகக்கல்வியை முறையாகப் பயில வழிவகுத்தது.
Related topics
Want this shaped for your exam marks?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →