generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 200definition

Criticism)

Chapter 42: Class 12 Advance Tamil · ADVANCED TAMIL · TA medium

From your actual textbook ✓

What does your textbook say about Criticism)?

Criticism) ஓர் இலக்கியத்தில் குறை காணாமல் அதன் நிறைகளை மட்டும் எடுத்துக்கூறுதல். எடுத்துக்காட்டாகக் கம்பராமாயணத்தைக் கூறல ம். இதனைப் பாராட்டிப் பல திறனாய்வு நூல்கள் வெளிவந்துள்ளன. முடிபுமுறைத் திறனாய்வு ( J u d i c i a l Criticism) சில வரையறைகளையும் விதிகளையும் அளவுகோலாகக்கொண்டு, குறிப்பிட்ட இலக்கியம் பற்றிய முடிபுகளைக் கூறுதல். எடுத்துக்காட்டாகத் தண்டியலங்காரம் குறிப்பிடும் காப்பியப் பண்புகளை விதிகளாகக்கொண்டு, மணிமேகலைக் காப்பியத்தின் அமைப்பையும் பண்பையும் மதிப்பிட்டு, முடிவு கூறுதல். Criticism) சில விதிகளைத் தாம் திறனாய்வு மேற்கொள்ளும் இலக்கியத்தில் அப்படியே பொருத்திக் காணல். அன்பின் ஐந்திணையில், ‘தலைவனோ தலைவியோ சுட்டி ஒருவர்ப் பெயர் கொளப் பெற அர்‘ என்பது, தEொல்காப்பிய விதி.

📖 Class 12 Advance Tamil 2024 Edition www.tntextbooks.in · Page 200

Read from the source

Complete lesson

Criticism) ஓர் இலக்கியத்தில் குறை காணாமல் அதன் நிறைகளை மட்டும் எடுத்துக்கூறுதல். எடுத்துக்காட்டாகக் கம்பராமாயணத்தைக் கூறல ம். இதனைப் பாராட்டிப் பல திறனாய்வு நூல்கள் வெளிவந்துள்ளன. முடிபுமுறைத் திறனாய்வு ( J u d i c i a l Criticism) சில வரையறைகளையும் விதிகளையும் அளவுகோலாகக்கொண்டு, குறிப்பிட்ட இலக்கியம் பற்றிய முடிபுகளைக் கூறுதல்.

எடுத்துக்காட்டாகத் தண்டியலங்காரம் குறிப்பிடும் காப்பியப் பண்புகளை விதிகளாகக்கொண்டு, மணிமேகலைக் காப்பியத்தின் அமைப்பையும் பண்பையும் மதிப்பிட்டு, முடிவு கூறுதல். Criticism) சில விதிகளைத் தாம் திறனாய்வு மேற்கொள்ளும் இலக்கியத்தில் அப்படியே பொருத்திக் காணல். அன்பின் ஐந்திணையில், ‘தலைவனோ தலைவியோ சுட்டி ஒருவர்ப் பெயர் கொளப் பெற அர்‘ என்பது, தEொல்காப்பிய விதி. இவ்விதியை நெடுநல்வாடையில் பொருத்திக் காண்கிறார் நச்சினார்க்கினியர்.

அந்நூலில், தலைவன் பெயர் சுட்டப்பெறவில்லைதான். ஆனால், ‘வேம்பு தலையாத்த நோன்காழ் எஃகமொடு..‘ என்ற பாடலடியில், ‘வேம்பு‘ என்பது, பாண்டிய மன்னர்களுக்குரிய அடையாள மாலை என வெளிப்படையாகக் கூறப்பட்டுள்ளது. ஆகையால், இஃது அகநூல் அன்று, புறநூல். இந்நூலின் பாட்டுடைத் தலைவன், தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனே என்று நச்சினார்க்கினியர் உறுதியாகக் கூறுகிறார்.

திறனாய்வு (Inductive Criticism) எந்தப் படை ப்பைத் திறனாய்வு செய்கிறோமோ, அந்தப் படைப்பின் வழியாகவே அதற்குரிய விதிகளை அமைத்துக்கொள்ளல். எடுத்துக்காட்டாகச் சிலப்பதிகாரத்தின் அடிப்படை அமைப்பையும் தனிச்சிறப்பையும் உற்றுநோக்கி, அப்படைப்புக்குரிய விதிகளை வருவித்தல். இது, செலுத்துநிலை அல்லது படைப்புவழித் திறனாய்வாகும். Criticism) ஓர் இலக்கியப் படைப்பாளியையும், அவர் படைத்த இலக்கியத்தின் பல்வேறு கூறுகளையும் விளக்கமாக ஆய்வுசெய்தல்.

எடுத்துக்காட்டாகத் தEொல்காப்பியப் பொருளதிகாரத்தைப் பற்றிய திறனாய்வு அதன் அமைப்பு, இயல்தோறும் பொருள் வைப்புமுறை, களவு, கற்பு ஆகியவற்றின் தனித்தன்மை, தமிழ் மரபுக்கேற்ற அமைப்பு ஆகியவற்றை விளக்கமாக எடுத்துரைத்தல். Criticism) குறிப்பிட்ட இலக்கியத்தின் தரம், தகுதி, சிறப்பு, சீர்மை என்பனவற்றைப் பேசுவதEோடு, அவ்விலக்கியத்தில் அமைந்திருக்கும் கூறுகளும், பண்புகளும், உண்மைகளும் இலக்கிய மதிப்பு உடையவை என ஆராய்ந்து கூறுதல். எடுத்துக்காட்டாகப் பாரதியாரின் ‘குயில்பாட்டு‘ அவரைச் சிறந்த கவிஞர்களுள் ஒருவராகக் கருதச்செய்கிறது எனில், அதற்கான காரணங்களைச் சான்றுடன் காட்டுதல். Criticism) இருவேறுபட்ட இலக்கியங்களை எடுத்துக்கொண்டு, ஒப்பியல் முறையில் ஆய்வு செய்தல்.

அவ்வாறு ஒப்பிடும்போது, அவ்விரு இலக்கியங்களுக்குமிடையே ஓரளவாவது பொதுத்தன்மை இருத்தல் வேண்டும். ஒப்பீட்டுத் தளங்கள் பின்வருமாறு அமையலாம். • ஒரு நாட்டு இலக்கியத்துடன் பிற நாட்டு இலக்கியம் • ஒரே படை ப்பாளியின் வெவ்வேறு இலக்கியங்கள் • ஒரே நாட்டிலுள்ள வெவ்வேறு மொழி இலக்கியங்கள் • இலக்கிய நூலுடன் இலக்கிய நூல், இலக்கண நூலுடன் இலக்கண நூல். (இலக்கியத்துடன் இலக்கண நூலை Criticism) குறிப்பிட்ட இலக்கியத்தின் பண்புகளையும் கூறுகளையும் ஏதேனும் ஓர் அளவுகோல் அல்லது நோக்கம்கொண்டு பகுத்துக் காணல்.

எடுத்துக்காட்டாகச் சி. சு. செல்லப்பாவின் ‘ மௌனியின் மனக்கோலம்‘ என்னும் ஆய்வுக்கட்டுரை, எழுத்தாளர் மௌனியின் சிறுகதை உத்திகளையும் உண்மை நிலைகளையும் வேறுபடுத்தி விவரிக்கின்றது. இதன்மூலமாகத் தமிழ்ச் சிறுகதைகளின் பண்புகளும் சிறப்புகளும் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.

இதுவரை, திறனாய்வின் வகைகளைப் பார்த்தீர்கள். இனி, அதன் அணுகுமுறைகளைக் காண்போம். திறனாய்வு அணுகுமுறைகள் ஓர் இலக்கியத்தைப் படித்துச்சுவைப்பது என்பது வேறு, அவ் இலக்கியத்தைத் திறனாய்வு செய்வது என்பது வேறு. சுவைப்பதற்கு அணுகுமுறை தேவையில்லை.

ஆனால், திறனாய்வு செய்வதற்கு அணுகுமுறை இன்றியமையாததாக உள்ளது.

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →