generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 61grammar_exercise

கதைமாந்தர்கள்

Chapter 42: Class 12 Advance Tamil · ADVANCED TAMIL · TA medium

From your actual textbook ✓

What does your textbook say about கதைமாந்தர்கள்?

கதைமாந்தர்கள் புதினத்திற்குள் உருவாக்கப்படும் மனிதர்களைக் கதைமாந்தர்கள் என்பர். கதைமாந்தர்களுடன் பயணிப்பதே வாசக மனத்தின் விருப்பமாக இருக்கிறது. கதைமாந்தர்களை உயிர்ப்புடன் படைத்துச் செல்வது புதினத்தின் முதன்மையான தேவை. புதினத்திற்குள் அதன் பரப்பு முழுவதும் வந்து முதன்மையானவர்களாக அடையாளம் காணப்படும் மாந்தர்களை முதன்மை மாந்தர்கள் எனவும், சில நிகழ்வுகளில் இடம்பெற்று முதன்மை மாந்தர்களோடு தEொடர்புடைய மாந்தர்களைத் துணைமை மாந்தர்கள் எனவும் அழைப்பர். புதினத்தில் கதைமாந்தர் அறிமுகமாகும் இடத்திலேயே அவரைப்பற்றிய தன்மையை வாசகர் மனத்தில் தெளிவாக ஏற்படுத்திவிட வேண்டும். உறுதியான ஒரு கதைமாந்தர் அடையும் மாற்றமே (வளர்ச்சி/வீழ்ச்சி) புதினத்திற்கு இலக்கியத்தன்மையைத் தருகிறது.

📖 Class 12 Advance Tamil 2024 Edition www.tntextbooks.in · Page 61

Read from the source

Complete lesson

கதைமாந்தர்கள் புதினத்திற்குள் உருவாக்கப்படும் மனிதர்களைக் கதைமாந்தர்கள் என்பர். கதைமாந்தர்களுடன் பயணிப்பதே வாசக மனத்தின் விருப்பமாக இருக்கிறது. கதைமாந்தர்களை உயிர்ப்புடன் படைத்துச் செல்வது புதினத்தின் முதன்மையான தேவை. புதினத்திற்குள் அதன் பரப்பு முழுவதும் வந்து முதன்மையானவர்களாக அடையாளம் காணப்படும் மாந்தர்களை முதன்மை மாந்தர்கள் எனவும், சில நிகழ்வுகளில் இடம்பெற்று முதன்மை மாந்தர்களோடு தEொடர்புடைய மாந்தர்களைத் துணைமை மாந்தர்கள் எனவும் அழைப்பர்.

புதினத்தில் கதைமாந்தர் அறிமுகமாகும் இடத்திலேயே அவரைப்பற்றிய தன்மையை வாசகர் மனத்தில் தெளிவாக ஏற்படுத்திவிட வேண்டும். உறுதியான ஒரு கதைமாந்தர் அடையும் மாற்றமே (வளர்ச்சி/வீழ்ச்சி) புதினத்திற்கு இலக்கியத்தன்மையைத் தருகிறது. பொதுவாகக் கதைமாந்தர்கள் கதாசிரியனின் வாழ்வியல் மதிப்பீடுகளின் வடிவங்களே. அந்த மதிப்பீடுகளின் மோதல்களே புதினத்தின் உச்சத்தைத் தீர்மானிக்கின்றன.

கதைமாந்தரது தEோற்றத்தை, அவரை அறிமுகப்படுத்தும் இடத்தில் முழுமையாகச் சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. கதையின் போக்கில் அது தானாகவே வெளிப்படும் வகையில் அமைவது சிறப்பு.

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →