கூறுகள்
Chapter 42: Class 12 Advance Tamil · ADVANCED TAMIL · TA medium
From your actual textbook ✓
What does your textbook say about கூறுகள்?
கூறுகள் நமது மொழியைப் பயன்படுத்திப் புதின ஆசிரியர் எழுதிய நூலொன்று அச்சிடப்பெற்று புதினம் என்னும் வகைப்பாட்டுக்குரியதாக நமக்குக் கிடைக்கிறது. அந்த முழுமையான நூலுக்குள் கண்ணுக்குத் தெரியும் கூறுகளும் கண்ணால் பார்த்துப் புரிந்துகொள்ள முடியாத கூறுகளும் இருக்கின்றன. சில புதினங்கள் பாகங்களாகப் பிரிக்கப்பட்டுத் தரப்படுகின்றன. சில புதினங்கள் எண்ணிடப்பெ ற்ற இயல்களாகத் தரப்படுகின்றன. சில புதினங்கள் எண்ணிடப்படாமல் நிறுத்தக்குறிகள் வழியாகப் பிரிப்படையாளத்தைக் காட்டித் தரப்படுகின்றன. இவையெல்லாம் கண்ணுக்குப் புலப்படும் கூறுகள். இவையல்லாமல் புனைகதையைத் தாம் முன்வைக்க நினைத்த விவாதப்பொருளை நேரடியாகச் சொல்லாமல் புனைகதைத் தன்மைகொண்டு எழுத்தாளர் அதற்கொரு வடிவம் கொடுக்கிறார்.
📖 Class 12 Advance Tamil 2024 Edition www.tntextbooks.in · Page 60
Read from the source
Complete lesson
கூறுகள் நமது மொழியைப் பயன்படுத்திப் புதின ஆசிரியர் எழுதிய நூலொன்று அச்சிடப்பெற்று புதினம் என்னும் வகைப்பாட்டுக்குரியதாக நமக்குக் கிடைக்கிறது. அந்த முழுமையான நூலுக்குள் கண்ணுக்குத் தெரியும் கூறுகளும் கண்ணால் பார்த்துப் புரிந்துகொள்ள முடியாத கூறுகளும் இருக்கின்றன. சில புதினங்கள் பாகங்களாகப் பிரிக்கப்பட்டுத் தரப்படுகின்றன. சில புதினங்கள் எண்ணிடப்பெ ற்ற இயல்களாகத் தரப்படுகின்றன.
சில புதினங்கள் எண்ணிடப்படாமல் நிறுத்தக்குறிகள் வழியாகப் பிரிப்படையாளத்தைக் காட்டித் தரப்படுகின்றன. இவையெல்லாம் கண்ணுக்குப் புலப்படும் கூறுகள். இவையல்லாமல் புனைகதையைத் தாம் முன்வைக்க நினைத்த விவாதப்பொருளை நேரடியாகச் சொல்லாமல் புனைகதைத் தன்மைகொண்டு எழுத்தாளர் அதற்கொரு வடிவம் கொடுக்கிறார். அவற்றைப் புனைகதைக் கலைத்திறன் எனச் சொல்கின்றனர்.
முதன்மையான புனைகதைக் கலைக்கூறுகளை அறிந்துகொள்வதின் மூலம் நாமும் புனைகதை ஆசிரியர்களாக ஆகமுடியும். அக்கூறுகளாவன: . கதைப்பின்னல் . கதைமாந்தர்கள் .
சொல்முறை உத்திகள் . மொழிப்பயன்பாடு . பேசுபொருள் . பேசுபொருளுக்கான கால, இடத்தேர்வுகள்.
Related topics
Want this shaped for your exam marks?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →