இந்திய வானொலி
Chapter 42: Class 12 Advance Tamil · ADVANCED TAMIL · TA medium
Read from the source
Complete lesson
இந்திய வானொலி இந்தியாவின் முதல் வானொலி ஒலிபரப்பு நிலையம் சென்னையில் மாநில வானொலிக் குழுவால் 1924ஆம் ஆண்டு ஜூலை 31இல் தொடங்கப்பட்டது. தனியார் நிறுவனத்திடமிருந்த ஒலிபரப்புச் சேவையை இந்திய அரசு ஒலிபரப்புத்துறை (Indian State Broad casting Service- ISBS) தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்தது. இது 1936இல் அகில இந்திய வானொலி (All India Radio) எனப் பெயர்மாற்றம் பெற்றது. பின்னர் -முதல் ஆகாசவாணி என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. இந்தியா விடுதலை பெற்ற பிறகு இந்திய வளத்தையும் பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் வகையில் ஐந்தாண்டுத்திட்டங்கள் வகுக்கப்பட்டு வளர்ச்சிப் பணிகளுக்கென நிதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் வானொலிச் சேவையினை விரிவுபடுத்தும் பணிக்காக ஒவ்வோர் ஐந்தாண்டுத் திட்டத்திலும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுப் புதிய வானொலி நிலையங்களும் ஒலிபரப்புக் கோபுரங்களும் அமைக்கப்பட்டன. மேலும் குழந்தைகள், சிறுவர்கள், இளைஞர்கள், பெண்களுக்கான சிறப்பு நிகழ்ச்சிகள், கல்வி நிகழ்ச்சிகள், வேளாண்மை, விளையாட்டு என வானொலி தனது நிகழ்ச்சிகளின் எல்லையை விரிவுபடுத்திக்கொண்டது. வானொலி சேவை இந்திய நாட்டில் வானொலி அறிமுகமான நாள்முதல் இன்றுவரை பல்வேறு விதமான நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படுகின்றன. தேசிய ஒலிபரப்பு, மாநில மொழி ஒலிபரப்பு, வர்த்தக ஒலிபரப்பு போன்ற சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. பாராளுமன்ற நிகழ்வுகள் நேரலையாக ஒலிபரப்பப்படுகின்றன.
Related topics
Want this shaped for your exam marks?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →