வானொலியின் தEோற்றம்
Chapter 42: Class 12 Advance Tamil · ADVANCED TAMIL · TA medium
Read from the source
Complete lesson
வானொலியின் தEோற்றம் இத்தாலி நாட்டு அறிஞர் குலீல் மோ மார்கோனி வானொலியைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அதற்காகத் தம் வீட்டையே ஆராய்ச்சிக்கூடமாக மாற்றினார். நடுநாள்களாக நடைபெற்ற ஆராய்ச்சியின் முடிவாகக் கம்பியில்லாத் தந்தி முறையில் செய்திகளைத் தொலைதூரத்திற்கு அனுப்பும் முயற்சியில் வெற்றி பெற்றார். இக்கண்டுபிடிப்பை இங்கிலாந்து அறிவியல் கழகத்தில் பதிவு செய்தார். 1896ஆம் ஆண்டு மார்கோனி கம்பியில்லாத் தந்தியை கண்டுபிடித்தார். 1897ஆம் ஆண்டு கம்பியில்லாத் தந்தி சேவை நிறுவனத்தைத் தொடங்கினார். ஒலிபரப்பிற்குத் தேவையான கருவிகளையும் அவரே உருவாக்கினார். அட்லாண்டிக் கடலின் குறுக்கே கார்ன்வாலிஷில் இருந்து நியூபவுண்டுலாந்து (New Founland) வரை செய்திகளை அனுப்பினார். இதற்காக இவருக்கு ஆம் ஆண்டு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஏற்கெனவே இந்த ஆய்வில் ஈடுபட்டிருந்த பெர்டினாண்ட் பிரவுன் என்ற ஜெர்மானிய அறிஞரும் இவருடன் இணைந்து இப்பரிசினைப் பகிர்ந்துகொண்டார். மார்கோனி தமது அடுத்தடுத்த முயற்சியின் விளைவாக மைல் தொலைவிற்குச் செய்திகளை அனுப்பி வெற்றிகண்டார். இதனால் இவர் வானொலியின் தந்தை என அழைக்கப்படுகிறார். குலீல்மோ மார்கோனி
Related topics
Want this shaped for your exam marks?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →