generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 222definition

சிறுவர் நிகழ்ச்சிகள்

Chapter 42: Class 12 Advance Tamil · ADVANCED TAMIL · TA medium

From your actual textbook ✓

What does your textbook say about சிறுவர் நிகழ்ச்சிகள்?

சிறுவர் நிகழ்ச்சிகள் வானொலி, தொலைக்காட்சிகளில் சிறுவர்களை மகிழ்விக்கும் பல நிகழ்ச்சிகள் ஒலி-ஒளிபரப்பாகி வருகின்றன. இந்நிகழ்ச்சிகள் குழந்தைகளின் அறிவாற்றலை மேம்படுத்தும் வகையிலும் ஒழுக்க நெறியினைக் கற்பிக்கும் வகையிலும் தயாரிக்கப்பட்டு ஒளிபரப்பப்படுகின்றன. இவற்றில் சிறுவர்களுக்கான நன்னெறிக் கதைகள், பொதுஅறிவு நிகழ்ச்சிகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் போன்றவை இடம்பெறுகின்றன. சிறுவர்களுக்கெனத் தனியான அலைவரிசைகள் தொடங்கப்பட்டு மணி நேரமும் சிறுவர் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகின்றன. இலக்கு அளவீட்டுப் புள்ளி (TRP) (Target Rating Point) என்பது மொத்த பார்வையாளர்களுள் எத்தனை பார்வையாளர்கள் தEொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்கிறார்கள் என்பதன் மதிப்பீட்டளவாகும்.

📖 Class 12 Advance Tamil 2024 Edition www.tntextbooks.in · Page 222

Read from the source

Complete lesson

சிறுவர் நிகழ்ச்சிகள் வானொலி, தொலைக்காட்சிகளில் சிறுவர்களை மகிழ்விக்கும் பல நிகழ்ச்சிகள் ஒலி-ஒளிபரப்பாகி வருகின்றன. இந்நிகழ்ச்சிகள் குழந்தைகளின் அறிவாற்றலை மேம்படுத்தும் வகையிலும் ஒழுக்க நெறியினைக் கற்பிக்கும் வகையிலும் தயாரிக்கப்பட்டு ஒளிபரப்பப்படுகின்றன. இவற்றில் சிறுவர்களுக்கான நன்னெறிக் கதைகள், பொதுஅறிவு நிகழ்ச்சிகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் போன்றவை இடம்பெறுகின்றன. சிறுவர்களுக்கெனத் தனியான அலைவரிசைகள் தொடங்கப்பட்டு மணி நேரமும் சிறுவர் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகின்றன.

இலக்கு அளவீட்டுப் புள்ளி (TRP) (Target Rating Point) என்பது மொத்த பார்வையாளர்களுள் எத்தனை பார்வையாளர்கள் தEொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்கிறார்கள் என்பதன் மதிப்பீட்டளவாகும். ஒரு தEொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு விளம்பரம் அல்லது தEொடரினைப் பார்த்து ரசித்த இலக்கு பார்வையாளர்களின் மதிப்பீட்டுப் புள்ளிகளின் கூட்டுத்தொகை ஆகும். இதனை அளவிடும் கருவி "மக்கள் கருவி" என அழைக்கப்படும். நிகழ்ச்சி கல்வித் தொலைக்காட்சி கல்வி வானொலி செய்திகள் புவியியல் உயிரியல் விளையாட்டு அரசு சேவை அறிவியல் உடல்நலம் உலகச்செய்திகள் நேயர் கடிதங்கள் நிகழ்ச்சிகள் பற்றிய நேயர்களின் கருத்துகளைத் தெரிந்துகொள்வதற்காக வானொலியில் ‘ நேயர் கடிதம்’ என்ற நிகழ்ச்சியும் தொலைக்காட்சியில் ‘எதிரொலி’ என்ற நிகழ்ச்சியும் குறிப்பிட்ட கால இடைவெளியில் வழங்கப்படுகின்றன.

இந்நிகழ்ச்சியில் நேயர்களின் மடல்கள் வாசிக்கப்பட்டு அவற்றிற்கான பதில்கள் முன்வைக்கப்படுகின்றன.

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →