generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 224poem

உள்கட்டமைப்பு

Chapter 42: Class 12 Advance Tamil · ADVANCED TAMIL · TA medium

Read from the source

Complete lesson

உள்கட்டமைப்பு நாள்: . . இடம்: பூம்புகார் அப்பா! அன்பும் வணக்கமும். எங்கள் பள்ளியின் சார்பாகச் சென்ற வாரம் தொலைக்காட்சி நிலையத்தைப் பார்வையிடச் சென்றிருந்தோம். அந்த அனுபவத்தைத் தங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். பனிவிலகும் அதிகாலை நேரம். வானுயர்ந்த ஒளிபரப்பு கோபுரம் பொருத்தப்பட்டிருந்த வளாகத்தை அடைந்தோம். ‘இதுதான் நாம் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி பாரதி, தEொலைக்காட்சி நிலையத்தைப் பார்வையிட்டு வந்த அனுபவத்தை மின்னஞ்சல் மூலமாக அயல்நாட்டில் பணிபுரியும் தன் தந்தையிடம் பகிர்ந்து கொள்கிறாள். காணவந்த தொலைக்காட்சி நிலையம்’ என்றார் எங்கள் வகுப்பாசிரியர். இதுவரை வீட்டில் இருந்தபடியே செய்திகளையும் கலைநிகழ்ச்சிகளையும் தொலைக்காட்சியில் கண்டுகளித்த எங்களுக்குத் தொலைக்காட்சி நிலையத்தை நேரில் பார்ப்பது வியப்பாக இருந்தது. எங்கள் வருகைக்கு அனுமதியளித்திருந்த நிலைய இயக்குநரும் பணியாளர்களுள் சிலரும் நுழைவாயிலிலேயே காத்திருந்தனர். மாணவர்களாகிய எங்களை வரவேற்க நிலைய இயக்குநரே காத்திருந்த செயல் எங்களுக்கு மகிழ்ச்சியளித்தது.

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →