generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 185grammar_exercise

சூழல் கோட்பாடு – ( Contextual Theory)

Chapter 42: Class 12 Advance Tamil · ADVANCED TAMIL · TA medium

From your actual textbook ✓

What does your textbook say about சூழல் கோட்பாடு – ( Contextual Theory)?

சூழல் கோட்பாடு – ( Contextual Theory) ஒரு மொழியிலுள்ள சொற்கள், தEொடர்கள் ஆகியன சமுதாயச் சூழல்களைத் தழுவியே பொ ருண்மைகளை உணர்த்துகின்றன. சூழல்கோட்பாடு என்பது, ஒலிச் சூழல், உருபன் இணைப்புச் சூழல், இலக்கணச் சூழல், சொல் இணைப்புச் சூழல், பேச்சுச் சூழல் என ஐவகைப்படும். அவற்றை எடுத்துக்காட்டுகள்வழிக் காண்போம். அ) ஒலிச் சூழல் பலகை பல கை பலகை என்னும் சொல், ஒரு சொல்லாகத் தனித்து ஒலிக்கும்போ து, மரப்பலகை என்னும் பொருளையும், பல சொல்லாகத் தEொடர்ந்து ஒலிக்கும்போது, பல கைகள் என்னும் பொருளையும் தருகின்றது. இவ்வாறு வரும் சொற்களைப் பொதுமொழி எனப் படித்திருப்பீர்கள்.

📖 Class 12 Advance Tamil 2024 Edition www.tntextbooks.in · Page 185

Read from the source

Complete lesson

சூழல் கோட்பாடு – ( Contextual Theory) ஒரு மொழியிலுள்ள சொற்கள், தEொடர்கள் ஆகியன சமுதாயச் சூழல்களைத் தழுவியே பொ ருண்மைகளை உணர்த்துகின்றன. சூழல்கோட்பாடு என்பது, ஒலிச் சூழல், உருபன் இணைப்புச் சூழல், இலக்கணச் சூழல், சொல் இணைப்புச் சூழல், பேச்சுச் சூழல் என ஐவகைப்படும். அவற்றை எடுத்துக்காட்டுகள்வழிக் காண்போம். அ) ஒலிச் சூழல் பலகை பல கை பலகை என்னும் சொல், ஒரு சொல்லாகத் தனித்து ஒலிக்கும்போ து, மரப்பலகை என்னும் பொருளையும், பல சொல்லாகத் தEொடர்ந்து ஒலிக்கும்போது, பல கைகள் என்னும் பொருளையும் தருகின்றது.

இவ்வாறு வரும் சொற்களைப் பொதுமொழி எனப் படித்திருப்பீர்கள். ஆ) உருபன் இணைப்புச் சூழல் ஆறு – ஆற்றை (ஆறு + ற்+ ஐ) ஆறை (ஆறு+ஐ) ஆறு என்னும் சொல்லுடன் ஐ என்னும் உருபன் சேரும்போது, சூழலுக்கேற்பப் பொருள் மாற்றம் பெறுகிறது. ஆறு + கடந்தான் எனக் கூறும்போது, ஐ உருபனுடன் ஒற்று இரட்டித்து, ஆற்றைக் கடந்தான் எனவும், ஐந்துடன் ஆறு என்ற எண்ணைக் கூட்டு என வரும்போது, ஐ உருபன் மட்டுமே இணைந்து ஆறைக் கூட்டு எனவும் பொருள் தருகிறது. இ) இலக்கணச் சூழல் ஆடு - ஆடு ஆடு என்னும் சொல், பெயர்ச்சொல்லாகவும் வரும்.

வினைச்சொல்லாகவும் வரும். வயலில் ஆடு மேய்கிறது எனச் சொல்லும்போது, ஆடு என்பது, ஒரு விலங்கின் பெயரைக் குறிக்கும் பெயர்ச்சொல். இசைக்கேற்ப நடனம் ஆடு எனச் சொல்லும்போது, ஆடு என்பது ஆடுதல் என்னும் தEொழிலைக் குறிக்கும் வினைச்சொல்.

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →