நாடகத்தின் தEோற்ற வரலாறு
Chapter 42: Class 12 Advance Tamil · ADVANCED TAMIL · TA medium
From your actual textbook ✓
What does your textbook say about நாடகத்தின் தEோற்ற வரலாறு?
நாடகத்தின் தEோற்ற வரலாறு தமிழ் மொழியின்கண் வழங்கும் கலைகளை இயல் இசை நாடகம் எனப் பகுத்துக் கூறுவது மரபு. சங்க காலத்தில் நாடக அரங்கில் நிகழ்த்துகலை நிகழ்ந்ததற்கான அடையாளங்களாக ஆடல், நடனம், நாட்டியம் போன ற சொற்கள் கிடைக்கின்றன. ஆட்டத்தோடு பேச்சும் கலந்து நிகழ்த்தப்பெற்றது நாடகம். பழந்தமிழில் கூத்து என்ற சொல் நாடகத்தைக் குறித்தது. தெய்வங்களை வணங்குதல், வெற்றிக் கொண்டாட்டம், சமூக சடங்குகள் போன ற நிகழ்வுகளின்போது மக்களை மகிழ்விக்க நிகழ்த்தப்பட்ட நடனங்களும் கூத்துகளும் நாளடைவில் பல்வேறு நிலைகளில் மாற்றம் பெற்று நாடகமாக வளர்ச்சியடைந்தன.
📖 Class 12 Advance Tamil 2024 Edition www.tntextbooks.in · Page 130
Read from the source
Complete lesson
நாடகத்தின் தEோற்ற வரலாறு தமிழ் மொழியின்கண் வழங்கும் கலைகளை இயல் இசை நாடகம் எனப் பகுத்துக் கூறுவது மரபு. சங்க காலத்தில் நாடக அரங்கில் நிகழ்த்துகலை நிகழ்ந்ததற்கான அடையாளங்களாக ஆடல், நடனம், நாட்டியம் போன ற சொற்கள் கிடைக்கின்றன. ஆட்டத்தோடு பேச்சும் கலந்து நிகழ்த்தப்பெற்றது நாடகம். பழந்தமிழில் கூத்து என்ற சொல் நாடகத்தைக் குறித்தது.
தெய்வங்களை வணங்குதல், வெற்றிக் கொண்டாட்டம், சமூக சடங்குகள் போன ற நிகழ்வுகளின்போது மக்களை மகிழ்விக்க நிகழ்த்தப்பட்ட நடனங்களும் கூத்துகளும் நாளடைவில் பல்வேறு நிலைகளில் மாற்றம் பெற்று நாடகமாக வளர்ச்சியடைந்தன. அரங்கம் மற்றும் அரங்க நிகழ்வுகள் குறித்துத் தEொல்காப்பியத்தின் மெய்ப்பாட்டியல் வழியாகவும் சிலப்பதிகாரத்தின் அரங்கேற்றுக்காதை வழியாகவும் விரிவான செய்திகளை அறியமுடிகிறது. பிற்காலச் சோழ, பாண்டிய மன்னர்கள் நாடகக்கலை வளர உறுதுணையாக இருந்தனர். கலைஞர்களுக்குப் பரிசுகளும், பட்டங்களும், நிலங்களும் கொடுத்து ஊக்குவித்த குறிப்புகளை அவர்களின் கல்வெட்டுகள் காட்டுகின்றன.
பதினேழு, பதினெட்டாம் நூற்றாண்டுகளில் பள்ளு, குறவஞ்சி, நொண்டி, கீர்த்தனை, நாட்டார் நாடகங்கள் எனப் பல்வேறு நாடக வகைமைகள் தEோன்றின.
Related topics
Want this shaped for your exam marks?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →