யும்
Chapter 42: Class 12 Advance Tamil · ADVANCED TAMIL · TA medium
From your actual textbook ✓
What does your textbook say about யும்?
யும் ஓர் இலக்கியத்தைத் திறனாய்வு செய்வதற்குமுன், அஃது இலக்கியம்தானா என அறிந்துகொள்ள வேண்டுமல்லவா! அப்படியானால் எது இலக்கியம்? எழுதப்பட்டதெல்லாம் இலக்கியமா? அல்லது அச்சிடப்பெற்றவையெல்லாம் இலக்கியமா? எடுத்துக்காட்டாக விண்ணப்பம், தேர்வு, பஞ்சாங்கம், நாட்குறிப்பு, அறிவிப்பு, விளம்பரம், கடிதம் போன றவையெல்லாம் எழுதப்படுகின்றன. அவ்வாறெனில் இவற்றை இலக்கியம் எனக் கூறுவதில்லை. அச்சிடப்பெற்று நாள்தோறும் வெளியாகும் செய்தித்தாள்களை இலக்கியம் என வகைப்படுத்துவதில்லை. ஏன் தெரியுமா? இவை செய்திகளைத் தெரிவிக்க மட்டுமே பயன்படுகின்றன. இவற்றைப் படிப்பதால் உங்களுக்கு எந்தவொரு கற்பனையோ உணர்ச்சியோ எழுவதில்லை. அறிவியல் உண்மைகளும் கணக்கு முதலான புள்ளியியல் விவரங்களும்கூட அறிவூட்டவும் ஆர்வத்தைத் தூண்டவும் செய்கின்றன.
📖 Class 12 Advance Tamil 2024 Edition www.tntextbooks.in · Page 197
Read from the source
Complete lesson
யும் ஓர் இலக்கியத்தைத் திறனாய்வு செய்வதற்குமுன், அஃது இலக்கியம்தானா என அறிந்துகொள்ள வேண்டுமல்லவா! அப்படியானால் எது இலக்கியம்? எழுதப்பட்டதெல்லாம் இலக்கியமா? அல்லது அச்சிடப்பெற்றவையெல்லாம் இலக்கியமா?
எடுத்துக்காட்டாக விண்ணப்பம், தேர்வு, பஞ்சாங்கம், நாட்குறிப்பு, அறிவிப்பு, விளம்பரம், கடிதம் போன றவையெல்லாம் எழுதப்படுகின்றன. அவ்வாறெனில் இவற்றை இலக்கியம் எனக் கூறுவதில்லை. அச்சிடப்பெற்று நாள்தோறும் வெளியாகும் செய்தித்தாள்களை இலக்கியம் என வகைப்படுத்துவதில்லை. ஏன் தெரியுமா?
இவை செய்திகளைத் தெரிவிக்க மட்டுமே பயன்படுகின்றன. இவற்றைப் படிப்பதால் உங்களுக்கு எந்தவொரு கற்பனையோ உணர்ச்சியோ எழுவதில்லை. அறிவியல் உண்மைகளும் கணக்கு முதலான புள்ளியியல் விவரங்களும்கூட அறிவூட்டவும் ஆர்வத்தைத் தூண்டவும் செய்கின்றன. ஆனால், அவையும் இலக்கியம் ஆகா.
அப்படியென்றால் எது இலக்கியம்? ஒரு நூலைப் படிக்கும்போது நம் மகிழ்ச்சியை மிகுவிப்பதாக அமைவதே இலக்கியம். அது கவிதையாக, செய்யுளாக, கதையாக, நாடகமாக, உரைநடையாக, கட்டுரையாக எனப் பல வடிவங்களில் அமையலாம். அவையாவும் அறிவையொட்டி மட்டும் அமைவதல்ல; கற்பனை மிகுந்த உணர்ச்சியையொட்டியும் அமைவனவாகும்.
மனிதனின் மொழியோடு தEொடர்புகொண்டு அவனது சிந்தனைக்கோ, கற்பனைக்கோ, உணர்ச்சிக்கோ விருந்தாக அமைவன எல்லாம் இலக்கியங்களே. இவை அச்சிடப்பெற்று இலக்கிய எழுத்துகளாய் மிளிர்கின்றன என்றாலும், அச்சிடப்பெறாத சிலவற்றைக்கூட நாம் இலக்கியங்கள் எனக் கூறுகிறோம். ஒரு மொழியில் பேச்சும் உண்டு, எழுத்தும் உண்டு. எழுத்து வடிவம் பெறாது, பேச்சில் வழங்கப்படும் நாட்டுப்பாடல்கள், விடுகதைகள், பழமொழிகள், ஆகியவற்றைத்தாம் நாம் இங்கே அச்சிடப்பெறாத இலக்கியங்கள் என்று குறிப்பிடுகிறோம்.
இவையும் இலக்கிய வரம்புக்குள்தாம் அமைகின்றன. நாம் ஏன் இவற்றைத் தெரிந்துகொள்ள வேண்டும்? இலக்கியத் திறனாய்வு செய்ய வேண்டுமென்றால் இலக்கியங்களைப் பற்றியும் அவற்றின் வடிவம், கருத்து, தன்மை ஆகியவற்றைப் பற்றியும் நன்கு அறிந்திருக்க வேண்டும் திறனாய்வுக்குரிய களத்தையும் எவை இலக்கியம் என்பதையும் அறிந்துகொண்ட நிலையில், உலக அளவில் இலக்கியங்களின் பொ துஇயல்புகளைக் குறித்துப் பேசும் அடிப்படைக் கலைச்சொற்கள் சிலவற்றை அறிந்துகொண்டு, திறனாய்வுக்குள் நுழையலாம். இலக்கிய வடிவங்கள் எல்லாவற்றிலும் இருக்கும் தன்மைகளைக் கொண்டு இலக்கியங்கள் பின்வருமாறு வகைப்படுத்தப்படுகின்றன.
அவை: . செவ்வியம் . புனைவியம் . இயற்பண்பியம் .
நடப்பியம் . நடப்பியம் அல்லாதன இவ்வைந்து வகைப்பாடுகளைச் சுருக்கமாக அறிந்துகொள்ளலாம்.
Related topics
Want this shaped for your exam marks?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →