பொருள் மயக்கம்
Chapter 4: Class 12 Tamil · Part 5 · TAMIL · TA medium
From your actual textbook ✓
What does your textbook say about பொருள் மயக்கம்?
பொருள் மயக்கம் தமிழ்ம ழியை எழுதும்போ தும் படிக்கும்போ தும் பே சும்போ தும் சரியான முறையைப் பின்பற்றினால், பொருள் மயக்கம் இல்லாமல் புரிந்துகொள்ள முடியும். பொருள்கோள் செய்யுளில் சொற்களைப் பொருளுக்கு ஏற்றவாறு சேர்த்தோ, மாற்றியோ பொருள் கொள்ளும் முறைக்குப் 'பொருள்கோள்' என்று பெயர். பொருள்கோள் எட்டு வகைப்படும். அவை ஆற்றுநீர்ப் பொருள் கோள், மொழிமாற்றுப் பொருள்கோள், நிரல்நிறைப் பொருள்கோள், விற்பூட்டுப் பொருள்கோள், தாப்பிசைப் பொருள்கோள், அளைம றிபாப்புப் பொருள்கோள், கொண்டுகூட்டுப் பொருள்கோள், அடிமறிமாற்றுப் பொருள்கோள் ஆகியன. செய்யுளில் சொற்களைப் பொருள்கொள்ள பொருள்கோள் உதவுவதுபோல், உரைநடையில் சொற்களையும் தொடர்களையும் மயக்கமின்றிப் பொருள் கொள்ள, சில உத்திகள் உதவுகின்றன.
📖 Class 12 Tamil 2025 Edition www.tntextbooks.in · Page 74
Read from the source
Complete lesson
பொருள் மயக்கம் தமிழ்ம ழியை எழுதும்போ தும் படிக்கும்போ தும் பே சும்போ தும் சரியான முறையைப் பின்பற்றினால், பொருள் மயக்கம் இல்லாமல் புரிந்துகொள்ள முடியும். பொருள்கோள் செய்யுளில் சொற்களைப் பொருளுக்கு ஏற்றவாறு சேர்த்தோ, மாற்றியோ பொருள் கொள்ளும் முறைக்குப் 'பொருள்கோள்' என்று பெயர். பொருள்கோள் எட்டு வகைப்படும். அவை ஆற்றுநீர்ப் பொருள் கோள், மொழிமாற்றுப் பொருள்கோள், நிரல்நிறைப் பொருள்கோள், விற்பூட்டுப் பொருள்கோள், தாப்பிசைப் பொருள்கோள், அளைம றிபாப்புப் பொருள்கோள், கொண்டுகூட்டுப் பொருள்கோள், அடிமறிமாற்றுப் பொருள்கோள் ஆகியன.
செய்யுளில் சொற்களைப் பொருள்கொள்ள பொருள்கோள் உதவுவதுபோல், உரைநடையில் சொற்களையும் தொடர்களையும் மயக்கமின்றிப் பொருள் கொள்ள, சில உத்திகள் உதவுகின்றன. இவற்றைப் பின்பற்றினால் உரைநடையில் பொருள் மயக்கம் வராது; தெளிவு ஏற்படும். எழுதும்போதோ பே சும்போதோ தேவை யான இடங்களில் இடைவெ ளி விடாத தும் தேவை யற்ற இடங்களில் இடைவெ ளி விடுவதும் படிப்போ ர்க்கும் கேட்போ ருக்கும் பொருள் குழப்பத்தை ஏற்படுத்திவிடும். இடைவெ ளியும் பொருள் வேறுபாடும் எம் மொழி யார்க்கும் எளிது எம்ம ழியார்க்கும் எளிது அப் பாவின் நலங் காண்க அப்பாவின் நலங்காண்க ஐந்து மாடிவீடு ஐந்துமாடி வீடு அன்றுமுதல் பாடம் கற்றோம் அன்று முதல்பாடம் கற்றோம் இவ்வாறு சொற்களைச் சே ர்த்தும் பிரித்தும் எழுதுவதா ல் பொருள் மாறுபாடுகள் ஏற்படுகின்றன.
வல்லின மெ ய்களும் பொருள் வேறுபாடும் பிட்டுத் தின்றான் பிட்டு தின்றான் உள்ளக் கருத்து உள்ள கருத்து ஈட்டிக் கொண்டு வந்தான் ஈட்டி கொண்டு வந்தான் போன்ற தொடர்களில் வல்லின மெ ய்களால் ஏற்படும் பொருள் வே றுபாடுகளை அறிந்து பயன்படுத்த வே ண்டும். காற்புள்ளியும் பொருள் மயக்கமும் இயல்பாக உரையாடும்போ து பொருள்நிலையில் பெ ரும்பாலும் எந்தக் குழப்பமும் ஏற்படுவதில்லை. குரலில் ஏற்றம் – இறக்கம், சொற்களில் அழுத்தம் – குழைவு, இறுதிச் சொல் மூலம் வினாவா உணர்ச்சியா என்பதையெ ல்லாம் உணர்ந்து பொருளை நாம் சரியாக விளங்கிக் கொள்கிறோம். ஆனால் எழுதும்போ து காற்புள்ளியிடாம ல் எழுதினாலோ இடம் மாற்றிக் காற்புள்ளி இட்டாலோ தொடரில் உள்ள சொற்கள், அத்த டருக்குரிய முழுமையான பொருளைத் தராமல் வே றுபொருளைத் தந்துவிடும்.
அவள், அக்காள் வீட்டிற்குச் சென்றாள். இப்படிக் காற்புள்ளியிட்டு எழுதும்போ து அந்தப் பெ ண் தன் அக்காள் வீட்டிற்குச் செ ன்றாள் எனப் பொருள்படுகிறது, அவள் அக்காள், வீட்டிற்குச் சென்றாள். இத்த டரில் அந்தப் பெ ண்ணின் அக்காள் தன து வீட்டிற்குச் சென்றாள் எனப் பொருள்வேறுபடுவதை அறியலாம்.
Related topics
Want this shaped for your exam marks?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →