திரைமொIொழி
Chapter 6: Class 12 Tamil · TAMIL · TA medium
Read from the source
Complete lesson
திரைமொIொழி 1895ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் நாள் மாலை மணி, பிரான்சின் தலைநகரான பாரீசில் ‘கிராண்ட் கபே’ முன்பு ஒரு பெருங்கூட்டம்! கொட்டும் மழையிலும் குடைபிடித்துக் காத்துக் கொண்டிருந்து. அதற்குக் காரணம் அன்று காலை நாளிதழில், ‘அதிசயம் பிறக்கிறது’ என்ற தலைப்போடு வந்த விளம்பரம்தான். அன்று ‘கிராண்ட் கபே’ விடுதியில் லூமியர் சகோதரர்கள் திரையிட்ட சில துண்டுப்படங்களில் ஒன்று ‘ரயிலின் வருகை’. திரையில் ரயில் முன் னோக்கி வேகமாக வருவதைப் பார்த்து, ரயில் நம்மீது ஏறிக் கொல்லப்போகிறது என்ற அச்சத்தில் பல ரும் அரங்கத்தை விட்டு அலறியடித்துக் கொண்டு வெளியில் ஓடினர். அப்படி மக்களை அச்சப்பட வைத்த திரைப்படக்கலை, நிகழ்காலத்தில் கொண்டாட்டத்திற்கு உரியதாக மாறியுள்ளது. லூமியர் சகோதரர்கள் மூலம் உருவான திரைப்படக் கலை, இன்று உலகையே ஆள்கிறது. நாம் அணியும் உடை, உணவு, அரசியல் என எல்லாவற்றையுமே தீர்மானிக்கும் அளவுக்குத் திரைப்படம் வளர்ந்திருக்கிறது. அக்கலையின் வளர்ச்சிக்குப் பெரும்பங்காற்றிய அறிஞர்கள் சிலர். அவர்களுள் முதன்மையானவர் தாமஸ் ஆல்வா எடிசன் . இவர்தான் அசையும் உருவங்களைப் பட ம்பிடிக்கும் கருவியைக் கண்டுபிடித்தார். அதன்பிறகு லூமியர் சகோதரர்கள் படப் பிடிப்புக் கருவியோடு திரையிடும் கருவியையும் (Projector) சேர்த்துத் திரைப்படம் என்னும்
Related topics
Want this shaped for your exam marks?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →