இயல் 5
Chapter 6: Class 12 Tamil · TAMIL · TA medium
From your actual textbook ✓
What does your textbook say about இயல் 5?
இயல் பாடப்பகுதியிலுள்ள பாடல், இராமலிங்க அடிகள் இயற்றிய திருவருட்பா வில் ஐந்தாம் திருமுறையில் இடம்பெற்ற தெய்வமணிமால என்னும் பாமால யில் உள்ளது. இப்பாடல் சென்னை, கந்தகோட்டத்து முருகப்பெருமானின் அருளை வேண்டுகிற தெய்வமணிமால யின் 8ஆம் பாடல். சமரச சன்மார்க்க நெறிகள வகுத்தவரும் பசிப்பிணி போக்கியவருமான அடிகள், சிதம்பரத்தை அடுத்த மருதூரில் பிறந்தார். சிறுவயதிலேயே கவிபாடும் ஆற்றல் பெற்றிருந்தார். இம்மண்ணில் ஆன்மநேய ஒருமைப்பாடு எங்கும் தழைக்கவும் உண்மைநெறி ஓங்கவும் உழைத்தவர் அடிகளார். வாடிய பயிரைக் கண்டபோது வாடிய அவ்வள்ளலின் பாடல்கள் ஊனை உருக்கி உள்ளொளி பெருக்கும் தன்மையுடையவை. திருவருட்பா, ஆறு திருமுறைகளாகப் பகுக்கப்பட்டுள்ளது. ‘மனுமுறை கண்ட வாசகம்’, ‘ஜீவகாருண்ய ஒழுக்கம்’ ஆகியவை இவருடைய உரைநடை நூல்கள்.
📖 Class 12 Tamil 2025 Edition www.tntextbooks.in · Page 123
Read from the source
Complete lesson
இயல் பாடப்பகுதியிலுள்ள பாடல், இராமலிங்க அடிகள் இயற்றிய திருவருட்பா வில் ஐந்தாம் திருமுறையில் இடம்பெற்ற தெய்வமணிமால என்னும் பாமால யில் உள்ளது. இப்பாடல் சென்னை, கந்தகோட்டத்து முருகப்பெருமானின் அருளை வேண்டுகிற தெய்வமணிமால யின் 8ஆம் பாடல். சமரச சன்மார்க்க நெறிகள வகுத்தவரும் பசிப்பிணி போக்கியவருமான அடிகள், சிதம்பரத்தை அடுத்த மருதூரில் பிறந்தார். சிறுவயதிலேயே கவிபாடும் ஆற்றல் பெற்றிருந்தார்.
இம்மண்ணில் ஆன்மநேய ஒருமைப்பாடு எங்கும் தழைக்கவும் உண்மைநெறி ஓங்கவும் உழைத்தவர் அடிகளார். வாடிய பயிரைக் கண்டபோது வாடிய அவ்வள்ளலின் பாடல்கள் ஊனை உருக்கி உள்ளொளி பெருக்கும் தன்மையுடையவை. திருவருட்பா, ஆறு திருமுறைகளாகப் பகுக்கப்பட்டுள்ளது. ‘மனுமுறை கண்ட வாசகம்’, ‘ஜீவகாருண்ய ஒழுக்கம்’ ஆகியவை இவருடைய உரைநடை நூல்கள்.
நூல்வெளி கற்பவை கற்றபின்... தெய்வமணிமால ப் பாடல் கருத்துகளுக்கு இணையான திருக்குற ள் கள த் தொகுத்து வருக. பாடலின் பொருள் அறம் செய்வார் நிறைந்திருக்கும் சென்னையின் கந்தகோட்டத்துத் திருக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் கந்தவேளே! குளிர்ந்த முகத்தோற்றத்தையுடைய தூய மாணிக்க மணியே!
அம்மணிகளுள் அருள்நிறைந்த சைவமணியே! எனக்கு ஒருநெறிப்பட்ட மனத்துடன் நின்னுடைய மலர்போன்ற திருவடிகளை நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்; உள்ளத்தில் ஒன்றும் புறத்தில் ஒன்றுமாகப் பேசும் வஞ்சகர்தம் உறவு என்னைப் பற்றாதவாறு காக்க வேண்டும்; பெருமை சான்ற நினது புகழையே நான் பேச வேண்டும்; பொய் பேசாதிருக்க வேண்டும்; சிறந்த வாழ்வியல் நெறியைப் பின்பற்றுமாறு எனக்கு அருள வேண்டும்; மதமான பேய் என்னை அணுகாதிருக்க வேண்டும்; துறவுக்கு எதிரான பெண்ணாசையை என் மனம் மறக்க வேண்டும்; என்றும் உன்னை மறவாதிருக்க வேண்டும்; மதியும் நின் கருணையாகிய நிதியும் நோயற்ற வாழ்வும் உடையவனாக நான் இருக்க வேண்டும்; ஆறுமுகங்களை உடைய தெய்வமாகிய மணியே, இத்தகைய சிறப்புகளை நீ எனக்கு அருள்வாயாக. இலக்கணக்குறிப்பு மலரடி – உவமைத்தொகை வளர்தலம் – வினைத்தொகை உறுப்பிலக்கணம் நினைக்கின்ற = நினை + க் + கின்று + அ நினை – பகுதி; க் – சந்தி; கின்று – நிகழ்கால இடைநிலை; அ – பெயரெச்ச விகுதி. வைத்து = வை + த் + த் + உ வை – பகுதி; த் – சந்தி; த் – இறந்தகால இடைநிலை; உ – வினையெச்ச விகுதி.
பேசுவார் = பேசு + வ் + ஆர் பேசு – பகுதி; வ் – எதிர்கால இடைநிலை; ஆர் – பல ர்பால் வினைமுற்று விகுதி. புணர்ச்சி விதி உள்ளொன்று = உள் + ஒன்று விதி : ‘தனிக்குறில் முன்ஒற்று உயிர்வரின் இரட்டும்’ – உள்ள் + ஒன்று. விதி : ‘உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே’ – உள்ளொன்று. ஒருமையுடன் = ஒருமை + உடன் விதி : ‘இஈஐவழி யவ்வும்’ – ஒருமை + ய் + உடன் விதி : ‘உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே’ – ஒருமையுடன்.
தமிழர் மருத்துவமுறைக்கும் நவீன மருத்துவமுறைக்கும் உள்ள தொடர்பு குறித்து ஒப்படைவு உருவாக்குக. கற்பவை கற்றபின்... வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால் மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால் மீளாத் துயர்தரினும் வித்துவக் கோட்டம்மா! நீ ஆளா உனதருளே பார்ப்பன் அடியேனே.
பாசுர எண்: - குலசேகராழ்வார் தமிழர் பண்டைய நாள்களில் இருந்து மருத்துவ ஆளுமையோடு திகழ்கின்றனர். இதன் தாக்கங்கள் தமிழ் இலக்கியங்களில் விரவிக் கிடக்கின்றன. பக்தி இலக்கியங்களிலும் மருத்துவச் செய்திகள் செறிந்து இருப்பதனைப் பதிவு செய்துள்ள பாடல் ஒன்று பாடமாக... இயல் பாடலின் பொருள் பூம்பாவாய்!
இளம்பெண்கள் ஆரவாரத்தோடு கொண்டாடும் திருவிழாக்கள் நிறைந்த வீதிகளையுடைய பெரிய ஊர் திருமயிலை. அங்கு எழுச்சிமிக்க விழாக்கள் நிகழும். மயிலை கபாலீச்சரம் என்னும் கோவிலில் வீற்றிருக்கும் இறைவனுக்குப் பூசையிடும் பங்குனி உத்திர ஆரவார விழாவினைக் காணாமல் செல்வது முறை ஆகுமா? புணர்ச்சி விதி பூம்பாவாய் = பூ + பாவாய் விதி: பூப்பெயர்முன் இனமென்மையும் தோன்றும் - பூம்பாவாய் இலக்கணக்குறிப்பு மாமயிலை – உரிச்சொற்றொடர் உறுப்பிலக்கணம் கண்டான் = காண்(கண்) + ட் + ஆன் காண் – பகுதி (கண் எனக் குறுகியது விகாரம்) ட் – இறந்தகால இடைநிலை ஆன் – ஆண்பால் வினைமுற்று விகுதி அமர்ந்ததான் = அமர் + த்(ந்) + த் + ஆன் அமர் – பகுதி த் – சந்தி (ந் ஆனது விகாரம்) த் – இறந்தகால இடைநிலை.
ஆன் – ஆண்பால் வினைமுற்று விகுதி. பாடப்பகுதியாக உள்ள இப்பாடல், இரண்டாம் திருமுறையில் உள்ள திருமயிலாப்பூர் பதிகத்தில் இடம்பெற்றுள்ளது. பன்னிரு திருமுறைகளில் முதல் மூன்று திருமுறைகள் திருஞானசம்பந்தர் பாடிய பாடல்களின் தொகுப்புகள். இவர் பாடல்கள் இசைப் பாடல்களாகவே திகழ்கின்றன.
இப்பாடல்கள் நம்பியாண்டார் நம்பி என்பவரால் தொகுக்கப்பட்டுள்ளன. இப்பாடல்களுக்குத் தேவாரம் என்று பெயர். சமுதாயத்தின் பொருளாதார கல பண்பாட்டு நிலைகள், தமிழுக்கு இருந்த உயர்நிலை, இசை, தத்துவம், சமயக் கோட்பாடுகள் அனைத்தும் சம்பந்தர் பாடல்களில் விரவிக் கிடக்கின்றன. நூல்வெளி மயிலாப்பூர் சிறப்புகள்: .
மடலார்ந்த தெங்கின் மயிலை . இருளகற்றும் சோதித் தொன்மயிலை . கற்றார்கள் ஏத்தும் கபாலீச்சரம் . கண்ணார் மயிலைக் கபாலீச்சரம் .
கருஞ்சோல ழ்ந்த கபாலீச்சரம் . மங்குல் மதிதவழும் மாடவீதி மயிலாப்பூர் . ஊர்திரை வேலை உலாவும் உயர்மயிலை மயிலைப் பதிகத்தில் காணப்பெறும் விழாக்கள் . ஐப்பசி – ஓண விழா .
கார்த்திகை – விளக்குத் திருவிழா . மார்கழி – திருவாதிரை விழா . தை – தைப்பூச விழா . மாசி – கடலாட்டு விழா .
பங்குனி – பங்குனி உத்திர விழா உங்கள் பகுதியில் கொண்டாடப்படும் திருவிழாக்கள் பற்றிய தகவ ல்களைத் திரட்டி, நாளிதழ் ஒன்றின் செய்திப்பிரிவிற்கு அளிக்கும் வகையில் செய்தியாக எழுதுக. கற்பவை கற்றபின்... நடிப்புலகின் சக்கரவர்த்தி என எல்லாரும் வியக்கின்ற மகத்தான நடிகர் சிவாஜி கணேசன். நவரச உணர்வுகள த் தன் முகக் குறிப்புகளாலும் உடல்மொழிகளாலும் சிறப்பாக வெளிப்படுத்தி நடித்த மகாநடிகன்.
இத்தகைய சிறப்புகள ப் பெற்றுத் தமிழ்த் திரையுலகின் அடையாளமாக விளங்கும் செவாலியே சிவாஜி கணேசன் பற்றி அறிவது ஆளுமை ஒருவரைப் பற்றி அறிவதாகும். “இன்று மதியம் மிகச்சரியாக மூன்று மணிக்கு ராதா பிக்சர்ஸ் பேலசின் வெள்ளித் திரையில் தென்னிந்தியத் திரைப்பட நடிப்புச் சக்கரவர்த்தி, தமிழ்நாட்டின் நாட்டியப் பெருமையின் புகழ்க்கொடி நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிக்கும் தங்கப் பதக்கம்”. நீங்கள் இப்போது கேட்ட விளம்பரம் முப்பது வருடங்களுக்கு முன்பு கேரளத்தின் மிக முக்கியமான நகரத்தின் தெருக்களில் ஆட்டோ ரிக்சாவின் மேல் தடித்த உச்சஸ்தாயில் முழங்கிய ஓர் இளைஞனின் குரல். ஒரு நேரச் சாப்பாட்டுக்காகவும் ஐந்து ரூபாய்க் கூலிக்காகவும் சினிமா விளம்பரம் செய்து, உதய அஸ்தமனம்வரை ஊர் சுற்றிக் கொண்டிருந்த அந்த வயது பையனின் பெயர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு.
இருபது வருடங்களுக்குப் பிறகு சென்னையில் அரண்மனை போன்ற சிவாஜி கணேசனின் வீட்டிற்குள் அவரோடு ஒன்றாக உணவு அருந்தியபோது, கேரள நகரின் வீதிகளில் குரல் விற்றுப் பிழைத்த அந்தப் பழ ய பையன் என் நினைவலைகளில் மிதந்தான். 1986இல் நான் ‘ருதுபேதம்’ என்ற திரைப்படத்தின் ஐம்பதாம் நாள் விழாவில்தான் முதன்முதலில் அவரைச் சந்தித்தேன். சிவாஜி கணேசன் தலைமை ஏற்றிருந்த அந்நிகழ்ச்சியில் நானும் ஒரு பேச்சாளராக இருந்தேன். 1995இல் நண்பர் வி.பி.கெ.மேனன் ஒரு பட ம் எடுக்கத் தீர்மானித்தார்.
அதில் முக்கியமான வேடமே ற்று நடிக்க சிவாஜி கணேசனும் மோகன்லாலும் சம்மதித்திருந்தார்கள். திரைக்கதை ஜான்பால்; ‘ ராஜீவ்நாத்’ தான் பட த்தின் இயக்குநர். ஒருநாள் காலையில் ராஜீவ்நாத் என்னிடம் சொன்னார்: “ இன்னைக்குச் சாயங்காலம் சிவாஜி கணேசன், அவருடைய வீட்டுக்கு இரவு விருந்துக்கு நம்மைக் கூப்பிட்டிருக்கார்” . அன்று மாலை ஜான்பாலும் நானும் ராஜீவ்நாத்துடன் சிவாஜி கணேசனின் வீட்டுக்குப் போனோம்.
வீடென்றா சொன்னேன்; இல்லை அது ஓர் அரண்மனை. சிற்ப வேலைப்பாடுகள் செய்த மிகப் பெரிய கதவைத் தாண்டி உள்ளே நடந்தும் விசாலமான ஒரு தளம் நம்மை வரவேற்கிறது. அங்கே தங்கத்தால் இழைத்த இரண்டு பெரிய யானைத் தந்தங்கள் இருந்தன. இடப்புறத்தில் மேலே செல்ல, பெரிய மாடிப்படிகள்.
வேலைக்காரர் எங்களை மேலே வருமாறு பணித்தார். இயல்பாய் மாடி ஏறிய நான் ஒரு திருப்பத்தில் நடுங்கிப்போய்க் கையெடுத்துத் தலைகுனிந்து வணங்க முற்பட்டேன். அங்கே சுவரில் வீரபாண்டிய கட்டபொம்மனின் வேடத்தில் வீரத்தையும் கம்பீரத்தையும் கொட்டி முழங்கிய சிவாஜி கணேசனின் இயல் ஆயில் பெயிண்ட் செய்யப்பட்ட படம். அடுத்த திருப்பத்தில் உடைவாள் உருவின நிலையில் சத்ரபதி சிவாஜி.
வலது பெருவிரலால் மீசை முறுக்கி மந்தகாசப் புன்னகையுடன் நிற்கும் ராஜராஜசோழன் ஒருபுறம். ஒருபுறம் கண்ணாடி அறைக்குள் பிரஞ்சு அரசு, சிவாஜி கணேசனின் நடிப்பைப் பாராட்டி அளித்த செவாலியர் விருதுடன் கூடிய மிகப்பெரிய வெள்ளைக் குதிரை. எல்லாம் பார்த்து இரசித்தபடியே நாங்கள் சோஃஃபாக்களில் அமர்ந்தோம். மாம்பழச்சாறு வந்து.
அதைக் குடித்து முடித்தபோது மனைவியும் வேலை ஆட்களும் இருபுறமும் நடந்து வர சாட்சாத் சிவாஜி கணேசன் எங்களைப் பார்த்து வந்துகொண்டிருந்தார். ஒரே சீராய் அடி எடுத்து வைத்து, ஒவ்வொரு பாத அடி வைக்கும் போதும், மறுதோள் முன்னோக்கிச் சாய, தலை நிமிர்ந்து, நெஞ்சு விரித்து, இசைக்கு அசைப்பது போலக் கைகள் வீசி, பார்வை இமை அசையாது மெல்ல மெல்லச் சிங்க நடை நடந்து வரும் அந்த மகாநடிகனைப் பார்த்தபொழுது ராஜராஜ சோழனின் வருகையைப் பார்த்த தமிழ்நாட்டுத் தெருப்பிள்ளைகளைப்போல நான் துள்ளி எழுந்தேன். அவர் ஒரு ராஜநடை நடந்து வந்து சிம்மாசனத்தில் அமர்ந்ததார். நானும் ராஜீவ்நாத்தும் அவரின் காலில் விழுந்து வணங்கினோம்.
வலது கையால் ஆசீர்வாதம் செய்த சிவாஜி கணேசன், “உட்காருங்கோ” என்றார். நாங்கள் உட்கார்ந்தோம். “ என்ன ராஜீவ் என்ன சமாச்சாரம்? கதை ரெடியாயிடிச்சா?” என்றார்.
அவர்கள் கதையைப் பற்றியும் கதாபாத்திரத்தைப் பற்றியும் பேசிக்கொண்டிருக்க, நான் சிவாஜி கணேசனின் புருவங்களையும் கண்களையும் முக அபிநயங்களையும் உதடுகளையும் கைவிரல்களையும் தாள, லய அபிநயங்களையும் சலனங்களையும் பார்த்துக்கொண்டு நிசப்தனாய் அமர்ந்திருந்தேன். ஊழித் தாண்டவமாடும் ருத்ரன், கவச குண்டலம் கொடுத்த கர்ணன், காளமேகத்தில் கவிதை ததும்பச் செய்த கவிகுல குரு காளிதாசன், அமிழ்த் தமிழ்மொழியின் உன்னதக் கவியான பாரதி, தாய்த் தமிழ் மண்ணின் வீர தீரச் சந்தியான வீரபாண்டிய கட்டபொம்மன், சோழ குலோத்துங்கச் ரியனான ராஜராஜசோழன் எனச் சிவாஜி கணேசனின் கதாபாத்திரங்கள் என் மன அடுக்குகளில் மின்னிமறைந்தன. திரைக்கதைபற்றிய அவர்களின் உரையாடல் முடிந்தும் ராஜீவ்நாத்திடம் கேட்டார்: “இந்தப் பையன் யாரு?” நான் ஒரு மலையாளக் கவிஞன் என்று ராஜீவ்நாத் என்னை அறிமுகப்படுத்தினார். சட்டென என் முன்னால் இருகைகளையும் கூப்பி அவர் மென்மையாய்ச் சொன்னார்: “கவிஞரா?
வணக்கம்.” எனக்கான மரியாதை அல்ல அது, காவியக் கலையிடம் மூத்த திராவிடனுக்கு இருக்கும் ஆழ்ந்த ஆதரவையும் மரியாதையையும்தான் அவர் காண்பித்து என்பதைப் புரிந்துகொள்ளும் தெளிவு எனக்கு இருந்து. “உள்ளே போகலாம்.”அவர் எழுந்தார். நாங்கள் பின் தொடர்ந்தோம். எகிப்தின் முன்னாள் அதிபரான நாசர், நடிகர்களான பால் ம்யூனி, ஓமர்ஷெரீப், ரிச்சர்ட் பர்ட்டன், ப்ரதீப், ராஜ்கபூர் போன்ற உன்னதமான நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களைச் சிவாஜி கணேசன் எங்களுக்கு ஒவ்வொன்றாய்க் காண்பித்தார்.
அவர் வாழ்வினில் நடந்த சில விஷயங்கள் குறித்து எங்களோடு பகிர்ந்துகொண்டார். கணேசன் பிறந்த ஊர் விழுப்புரம். சின்னையா கணேசன் என்பதுதான் அவர் பெயர். ஆங்கிலேயரால் சிறை சென்ற தனது தந்தையை ஒன்பதாவது வயதில்தான் கணேசன் முதன்முதலில் பார்த்ததார்.
அவர் ஐந்து வயதாகும்போதே குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக நாடகக் கம்பெனியில் சேர்ந்ததார். இளம்பருவத்திலேயே தமிழ்நாட்டின் மிகச்சிறந்த நாடக நடிகன் என்று பெயரெடுத்தார். அண்ணாதுரையின் நாடகத்தில் சத்ரபதி சிவாஜியாக வேடமே ற்று நடித்தார். அதைப் பார்த்த பெரியார், வி.சி.
கணேசனுக்கு ‘சிவாஜி கணேசன்’ என்று பெயரிட்டார். அந்தப் பெயரே அவருக்கு நிலைத்தும்விட்டது. அந்தக் காலத்தில் பாலக்காடு, கொச்சின், திருவனந்தபுரம் போன்ற கேரள நகரங்களிலெல்லாம் சிவாஜி கணேசன் நாடகம் நடித்துள்ளார். அவர், ‘பராசக்தி’ என்ற திரைப்படத்தில் நடிக்க, முதன்முதலில் ஏ.வி.எம்.
ஸ்டுடியோவுக்கு வருகிறார். பராசக்தியின் வெற்றி அவரைத் திரைப்படத்துறையின் உச்சாணிக்கொம்பில் மலரச்செய்து அழகுபார்த்து. மிகவும் பிஸியான திரைப்பட நடிகனாக இருந்தபோதும் ஐம்பது வயதுவரை சொந்தமாக நாடகக் கம்பெனி நடத்தி, அரங்கங்களில் நடித்தும் வந்தார். “அரங்கத்து நடிப்போடு ஒப்பிட்டுப்பார்க்கும்போது என்னுடைய சினிமா நடிப்பு ஒண்ணுமேயில்ல.
சரித்திரத்திலும் புராணங்களிலும் வரும் வீரபுருஷர்களைத் தத்ரூபமாய் நடித்து அவர்களை எங்கள் நாட்டின் சாமானியப்பட்டவர்களும் ஏழைகளுமான மக்களின் இதயத்தில் குடிபுகச் செய்தேன். இதுதான் இந்த நாட்டிற்கு நான் செய்த கலாச்சாரப் பங்களிப்பு. என் நாடு என்னை ஒரு நாளும் மறக்காது.” இப்படிப் பேசி நிறுத்தியபோது அறுபத்து ஐந்து ஆண்டுகளாக அபிநயக் கலையின் அபார சமுத்திரத்தில் கப்பலோட்டிய அந்த் தமிழனின் முகத்தில் தெரிந்த ஆத்ம திருப்தியை வர்ணிக்க என்னுடைய எளிய வார்த்ததைக்குச் சக்தியில்லை. வீரபாண்டிய கட்டபொம்மன் என்ற திரைப்படம்தான் சிவாஜி கணேசனை உலக பிரசித்தி பெற்ற நடிகனாய் மாற்றியது.
ஆனாலும் அவர், ‘கட்டபொம்மன் நாடகம்தான் பிரமாதம். படம் ஒண்ணுமேயில்லை‘ என்றார். “அந்த நாடகத்தின் வசனம் ஏதும் ஞாபகம் இருக்கிறதா?” ராஜீவ்நாத்தான் அந்தக் கேள்வியைக் கேட்டுவிட்டார். “தலைபோனாலும் மறக்கமுடியுமா ?” ஒரு வசனம் எங்களுக்காகச் சொல்லமுடியுமா?
ராஜீவ்நாத் கேட்ட கேள்வியால் நான் பயந்துபோனேன். யாரிடம் இதைக் கேட்கிறோம் என்று ராஜீவ் யோசிக்கவில்லையா? அவரை, சிவாஜி கணேசன் கோபித்துக் கொள்வார் என்றே நான் நினைத்தேன். ஆனால் நம்பமுடியாத அந்த அதிசயம் அப்பட்டமாய் நிகழ்ந்ததேறியது.
சிவாஜி கணேசன் சிறிது நேரம் கண்மூடிக் கைகூப்பி அமர்ந்திருந்தார். பிறகு மெதுவாகக் குனிந்து, இடது கையால் வேட்டியின் தலைப்பைப் பிடித்து, மெதுவாக நிமிர்ந்து சட்டென விஸ்வரூபமெ டுத்துபோலத் திரும்பி நின்றார். நாங்கள் மிரண்டு போனோம். உயரம் குறைவான, வயதான, எங்களிடம் இவ்வளவு நேரம் இயல்பாய்ப் பேசிக்கொண்டிருந்த சிவாஜி கணேசனல்ல அது.
மனித ஆத்மாவை நடுநடுங்க வைத்த வீரபாண்டிய கட்டபொம்மன்தான் அது. ரியன் அஸ்தமனம் ஆகாத பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் பிரதிநிதியான ஜாக்சன் துரைக்கு நேராக பல நாடகங்களில் அதிக வேலையுள்ள பெரும் பாத்திரங்களை ஏற்று நான் நடித்திருக்கிறேன். ஆனாலும், இந்தக் கட்டபொம்மனில் எனக்கு இயற்கையாக எழும் உணர்ச்சி நாடக முடிவில் எத்தகைய கள ப்பை, சிரமத்தை உண்டாக்குகின்றது என்பதை நினைக்க எனக்குப் பயமாகவே இருக்கிறது. என்றாலும் எனது குழுவினரோடு நாடக நாள்களில் ஒன்றுபட்டுச் செயல்படுவதில் காணும் இன்பமும், மக்களின் பாரா ட்டுதலை நேருக்குநேர் பெறும் வாய்ப்பும், எனக்கு எதிலும் பெறமுடியாத ஒரு தனி மகிழ்ச்சியைத் தருகிறது என்ற உண்மை ஒன்றே எனக்குக் கிடைக்கும் பெரும் ஆறுதலாகும்.
-நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கற்பவை கற்றபின்... நூல்வெளி இப்பாடப்பகுதி, மலையாள க் கவிஞரும் நடிகருமான பால ச்சந்திரன் சுள்ளிக்காடு எழுதிய ‘சிதம்பர ஸ்மரண’ என்னும் நூலில் இடம்பெற்றுள்ளது. இந்நூலை, கே.வி.சைலஜா ‘சிதம்பர நினைவுகள்’ என்னும் தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். .
பராசக்தி, வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், திருவிளையாடல் போன்ற திரைப்படங்களில் இடம்பெற்ற சிவாஜி கணேசனின் வசனங்களை உரிய உச்சரிப்புடன் பேசி வகுப்பறையில் நடித்துக் காட்டுக. . உங்கள் பகுதியில் வாழ்ந்து வரும் கல ஞர் ஒருவரை நேரில் கண்ட அனுபவ த்தைத் தொகுத்து வழங்குக. ஆதித் தமிழக வீர பௌருஷத்தின் சிங்க் கர்ஜனை முழங்கியது.
“நீ ஏர் பிடித்தாயா? களை வெட்டினாயா? கஞ்சிக்கலயம் சுமந்தாயா? அங்குக் கொஞ்சி விளையாடும் எங்கள் குலப் பெண்களுக்கு மஞ்சள் அரைத்துக் கொடுத்தாயா?
நீ என்ன எனக்கு மாமனா? மச்சானா? மானங்கெட்டவனே.” தமிழக மக்களைச் சிலிர்த்ததெழச் செய்த உலகப் பிரசித்தி பெற்ற அந்த வசனத்தைக் கொஞ்சமும் மறக்காமல் ஏற்ற இறக்கத்துடன் ஒரே மூச்சில் சொல்லி முடித்து, நெற்றியில் வியர்வையை வடித்துவிட்டு சிவாஜி கணேசனாய்ச் சுருங்கி சோஃஃபாவில் திரும்பி வந்து உட்கார்ந்து எங்களை ஆழமாக ஒருமுறை பார்த்ததார். ஜான்பாலும் ராஜீவ் நாத்தும் மௌனத்தில் ஆழ்ந்திருந்தார்கள்.
“மலையாளத்தில் சரித்திர புராண நாடகங்கள் இல்லையா ? ” சிவாஜி கணேசன் கேட்டபோது ஜான்பாலும் ராஜீவ்நாத்தும் நானும் ஒரு நிமிடம் தலைகுனிந்து உட்கார்ந்தோம். “இராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு சி.என்.ஸ்ரீகண்டன் சாகேதம், கஞ்சன சீதா, லங்காலக்ஷ்மி என்று மூன்று நாடகங்கள் எழுதியிருக்கிறார்.” மானத்தைக் காப்பாற்றிக்கொள்ள ராஜீவ்நாத் சொன்னார் “இராவண வேடத்தில் நீங்கள் நடித்தால் நன்றாக இருக்கும்” என்றும் ராஜீவ்நாத் சிவாஜியிடம் சொன்னார். “என்ன பண்றது?
மலையாளம் தெரியாதே; வயசும் ஆயிடுச்சு?” ஒரு கதாபாத்திரத்தை இழந்த நடிகனின் நிராசை உதட்டிலும் குரலிலும் பட ர சிவாஜி கணேசன் சொன்னார். பிறகு அவர் எங்களை விசாலமான சாப்பாட்டு அறைக்கு அழைத்துச்சென்றார். அங்கே அவர் மனைவி கமலா அம்மா பல விதமான, தரமானதொரு விருந்தினை ஏற்பாடு செய்துவிட்டு எங்களுக்காய்க் காத்திருந்தார். சிவாஜி கணேசனும் எங்களோடு அமர்ந்ததார்.
அவர் மனைவி, உணவை எங்களுக்குப் பரிமாறினார். திரும்பி வரும்போது வாசல்வரை வந்து அந்த் திராவிடத் தம்பதிகள் எங்களை வழியனுப்பினார்கள். இரவு வணக்கம் சொல்லிக் கையசைத்து நிற்கும் சிவாஜி கணேசனையும் அவரின் மனைவியையும் பார்வையிலிருந்து மறையும்வரை பார்த்துக்கொண்டே வந்தேன். சீறிப்பாயும் காரில் உட்கார்ந்திருக்கும் போது என் இதயத்தில் தெருக்களில் குரல்விற்றுப் பிழைத்த அந்தப் பழ ய பையனின் சப்தம்.
“தென்னிந்திய நடிப்புச் சக்கரவர்த்தி, தமிழ்நாட்டின் நாட்டியப் பெருமையின் புகழ்க் கொடி, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிக்கும்.....” சிவாஜி கணேசன் பெற்ற விருதுகள் ஆப்பிரிக்க - ஆசியத் திரைப்பட விழாவில் (கெய்ரோ ) சிறந்த நடிகருக்கான விருது கல மாமணி விருது பத்மஸ்ரீ விருது (தாமரைத்திரு) பத்ம பூஷன் விருது (தாமரை அணி) செவாலியர் விருது தாதாசாகெ ப் பால்கே விருது உவமை ஒன்றை மற் றொன் றோடு ஒப்பிட்டுப் பார்ப்பது நம்மிடம் இயல்பாக அமைந்துள்ள பண்பாகும். தெரிந்தவற்றைக்கொண்டு தெரியாதவற்றை அறிந்துகொள்கிற மனித அறிவு வளர்ந்து வந்திருக்கிறது. மொழி தோன்றியபோதே உவமையும் தோன்றியிருக்க வேண்டும். கருத்தைச் சொல்கையில் கேட்போர் மனத்தை ஈர்க்கும் வகையிலும் சொல்வதை எளிதில் உணரும் வகையிலும் கூற உவமைகளை ( ஒப்பீடுகளை) ப் பயன்படுத்தினர்.
வினை (தொழில்), பயன், வடிவம் (மெய்), உரு (நிறம்) என்ற நான்கின் அடிப்படையில் உவமை தோன்றும் என்பார் தொல்காப்பியர். ( தொல். - ) புலிபோலப் பாய்ந்ததான் - வினை (தொழில்) மழைபோலக் கொடுக்கும் கை - பயன் துகில்போலும் அருவி - வடிவம் (மெய்) தளிர்போலும் மேனி - உரு (நிறம்) கண்ணன் புலிபோலப் பாய்ந்ததான் என்பதில் கண்ணன் - உவமேயம் (பொருள்), புலி – உவமானம் (உவமை), போல - உவம உருபு, பாய்தல் - பொதுத்தன்மை. இந்த நான்கு உறுப்புகள் உவமையை அமைக்கின்றன.
ஒன்றை எளிதாக விளக்கவும் தெளிவுபடுத்தவும் அழகுபடுத்தவும் உவமையே ஏற்றது. சங்கப்பாடல்களில் பெரும்பாலும் உவமை அணியே இடம்பெற்றுள்ளது. பிற அணிகள் குறைவாகவே இடம்பெற்றுள்ளன. சங்க இலக்கியத்தைத் தொகுத்தவர்கள், பாடல் ஆசிரியர்களின் பெயர் தெரியாதபோது அப்பாடலில் உள்ள உவமையைக் கொண்டே பாடல் எழுதியவர்களுக்குப் பெயர் ட்டினர்.
செம்புலப்பெயல்நீரார், தேய்புரிபழ ங்கயிற்றினார், அணிலாடு முன்றிலார் என்பவை அப்படி இடப்பட்ட பெயர்கள். “ஊர்க் குறுமாக்கள் வெண்கோடு கழாஅலின் நீர்த்துறை படியும் பெருங்களிறு போல இனியை பெரும எமக்கே மற்றதன் துன்னரும் கடாஅம் போல இன்னாய் பெரும! நின் ஒன்னா தோர்க்ககே” (புறம்- ) ஔவையார், அதியமானின் வெற்றிப் புகழையும் வீரச்சிறப்பையும் மிகக் குறைந்த அடிகளில் அழகாகப் புனைகிறார். குளத்தில் ஊர்ச் சிறுபிள்ளைகள் யானைமீது நீரை இறைத்தும் வெண் கொம்புகளைத் கழுவியும் விளையாடுவர்.
அந்த யானைக்கு மதம் பிடித்துவிட்டால், அதனருகில் யாரும் செல்ல முடியாது. அதியமானும் அப்படிப்பட்டவன்தான். பரிசிலர்க்கு இனியன். பகைவர்க்கு இன்னாதவன்.
யானை பற்றிய உவமை இப்பாடலுக்கு உயிரூட்டுகிறது. “கண்ணீரை நீ துடைத்த போது நட்சத்திரங்கள் துடைக்கப்பட்ட வானம் போல் உன் முகம் இருண்டு போயிருந்து.... .. “ என்னும் புதுக்கவிதை அடிகளிலும் உவமை அமைந்துள்ளதைக் காணலாம்.
வினை உவமை “அவர்கள் மூளையில் விதையை ப் போல் தூவப்பட வேண்டிய அறிவு ஆணியைப்போல் அறையப்படுகின்றது.“ பயன் உவமை “வறண்ட வாழ்வு துளிர்க்க மழைபோல் வந்தாய் நீ!“ இயல் மெய் உவமை ( வடிவம்) “சுருக்கிய குடையைப் போலத் தோன்றும் அசோகமரம்.“ உரு உவமை ( நிறம் ) “சோடிய விளக்காய் மாலைநேரச் சூரியனின் மஞ்சள் வெளிச்சம் தெருவில் நிரம்பி வழிந்து.“ ஆகிய கவிதைகளில் உவமை தோன்றும் களங்கள் வெளிப்பட்டுள்ளன. உருவகம் ஒப்பீட்டுச் செறிவும் பொருள் அழுத்தமும் சிறக்க அமையும்பொழுது அது உருவகம் எனப்படுகிறது. உவம உருபுகளை விரித்துச் சொல்வதைவிடத் தொகுத்தும் சுருக்கியும் சொல்லுவதில் ஆற்றலும் அழகும் இனிமையும் இருக்கின்றன. உவமை, உவமைத்தொகையாகி உருவகமாக மாறிற்று.
உவமையையும் உவமிக்கப்படும் பொருளையும் வேறுபடுத்தாமல் இரண்டும் ஒன்றே எனக்கூறுவது, ‘ உருவகம்’ ஆகும். உருவகத் தொடரில் உவமேயம் ( உவமிக்கப்படும் பொருள்) முன்னும், உவமை (ஒப்பாகக் காட்டப்படும் பொருள்) பின்னுமாக அமையும். உவமையின் செறிவுமிக்க வடிவமே உருவகம் . தாமரை போலும் முகம் என்ற உவமை செறிவூட்டப்பட்டு முகத்தாமரை என உருவகத்தை உருவாக்குகிறது.
உவமையைவிட உருவகம் ஆழமானது. உவமை அணியில் உவமானமும் உவமேயமும் வேறுவேறானவை என்ற எண்ணம் இருந்துகொண்டிருக்கும். உருவகத்தில் இரண்டும் ஒன்றே என்ற உணர்வு கிடைக்கிறது. தீப்போ ல் சினம் என்பதைச் ‘சினத்தீ’ என்பார் பாரதியார்.
பாடல் முழுவதும் உருவகமாக அமைவதும் உண்டு. “சுட்டும் விழிச்சுடர்தான் – கண்ணம்மா சூரிய சந்திரரோ? வட்டக் கரியவிழி – கண்ணம்மா வானக் கருமை கொல்லோ? பட்டுக் கருநீலப் புடவை பதித்த நல்வயிரம் நட்ட நடுநிசியில் – தெரியும் நட்சத்திரங்களடி...“ - பாரதி (கண்ணம்மா என் காதலி) என்னும் கவிதையில்தான் எத்தனை உருவகங்கள்.
பாஞ்சாலி சபதத்தில் அருச்சுனன் பாஞ்சாலியிடம், கதிரவன் ஒளிபட்டு விதவிதமாக மாயம் கொள்ளும் மேகங்களைப் பற்றிக் கூறுகின்ற உருவகங்கள் உள்ளம் கவர்பவை. தீயின் குழம்புகள், செழும்பொன் காய்ச்சிவிட்ட ஓடைகள், தங்கத்தீவுகள், நீலப்பொய்கைகள், தங்கத்தோணிகள், கருஞ்சிகரங்கள், தங்கத் திமிங்கலங்கள் என்றெல்லாம் மேகங்களை உருவகிப்பது அழகூட்டுகிறது. உருவகத்திலும் வினை உருவகம், பயன் உருவகம், வடிவ (மெய்) உருவகம், உரு (நிறம்) உருவகம் என்ற பகுப்பு உண்டு. எண்ணவலை பின்னும் மூளைச் சிலந்தி… (சிந்தனை) - வினை ஆவேசப் புயல்களாலும் அசைக்க முடியாத ஆகாசப் பூ… (கதிரவன்) - பயன் நீலவயலின் நட்சத்திர மணிகள்… (வானமும் விண்மீன்களும்) - மெய் மலைக்கிழவியின் நரைத்த கூந்தல்… (அருவி) - நிறம் காப்பிய இலக்கணம் காப்பியம் என்று சொன்னதும் ஐம்பெருங்காப்பியங்களின் பெயர்களை மடமடவெ ன்று சொல்லிவிடுவீர்கள்.
காப்பியங்கள் என்பவை நீண்ட கதைப்போக்கு உடையவை என்பதை அறிந்திருப்பீர்கள். சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி முதலிய காப்பியங்களைகளைக் கீழ்வகுப்புகளில் படித்தும் அவற்றின் கதைகளைக் கேட்டும் இருப்பீர்கள். ஐம்பெருங்காப்பியங்களைப் போலவே ஐஞ்சிறுகாப்பிய வகைகளும் தமிழில் உண்டு என்பதை அறிவீர்களா? எதன் அடிப்படையில் பெருங்காப்பியம், சிறுகாப்பியம் என வகைப்படுத்தப்படுகிறது?
சொல்லாட்சியும் நூல்களும் நன்னூலுக்கு உரை எழுதிய மயிலைநாதர் , தம் உரையில் ஐம்பெருங்காப்பியம் என்னும் சொற்றொடரையும் தமிழ்விடுதூது பாடிய புலவர் அந்நூலில் பஞ்சகாப்பியம் என்னும் சொற்றொடரை யும் குறிப்பிடுகின்றனர். ‘ பொருள் தொகை நிகண்டு ’, திருத்தணிகை உலா ஆகிய நூல்கள், பெருங்காப்பியம் ஐந்து எனக் குறிப்பிட்டு அவற்றின் பெயர்களையும் வழங்கியுள்ளன. சிறுகாப்பியங்கள் ஐந்து என்று வழங்கும் வழக்கம் சி. வை.
தாமோதரனார் காலத்திற்கு முன்பே இருந்துள்ளது என்பது அவர் பதிப்பித்த ளாமணி ( ) பதிப்புரையிலிருந்து அறிய முடிந்து. காப்பியத்தைக் குறிக்கும் பிறபெயர்கள் தொடர்நிலைச் செய்யுள், கதைச் செய்யுள், அகலக்கவி, விருத்தச் செய்யுள், உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள், மகாகா வியம். காப்பிய அமைப்பு முறை காதை, சருக்கம், இலம்பகம், படல ம் முதலானவை காப்பியச் சிற்றுறுப்புகளாக அமைந்திருக்கின்றன. காண்டம் என்பது பல சிற்றுறுப்புகளின் தொகுதியாக உள்ள பேருறுப்பைக் (பெரும்பிரிவு) குறிக்கும்.
சிலப்பதிகாரம், மணிமேகல - காதை ளாமணி, பாரதம் - சருக்கம் சீவக சிந்தாமணி - இலம்பகம் கந்தபுராணம், கம்பராமாயணம் - படலம் சிலப்பதிகாரம், கம்பராமாயணம் - காண்டம் அணிகளின் இலக்கணத்தைக் கூறும் நூல்களுள் முதன்மையான து தண்டியலங்காரம். இந்நூல் முத்தகம், குளகம், தொகைநிலை, தொடர்நிலை ஆகிய செய்யுள் வகைகள க் கூறுகிறது. இந்நான்கனுள் தொடர்நிலை என்னும் வகை, காப்பியத்தைக் குறிப்பதாகும். தொடர்நிலை ஒரு பாடல யும் மற்றொரு பாடல யும் சொல்லாலும் பொருளாலும் தொடர்பு ஏற்படுத்தும் செய்யுள் வகையைக் குறிக்கும்.
இது பொருள்தொடர்நிலை, சொல்தொடர்நிலை என்று இருவகைப்படும். எ.கா. பொருள்தொடர்நிலை - சிலப்பதிகாரம், கம்பராமாயணம் சொல்தொடர்நிலை - அந்தாதி இலக்கியங்கள் தண்டியலங்காரம் கூறும் காப்பிய இலக்கணம் வடமொழியில் ‘ காவ்யதரிசம் ’ என்ற நூலைத் தழுவித் தமிழில் எழுதப்பட்ட அணியிலக்கண நூல், ‘தண்டியலங்காரமாகும்’. இந்நூலில் பெருங்காப்பியம், சிறுகாப்பியம் என்று இருவகையாகப் பிரிக்கப்பட்டுக் காப்பிய இலக்கணம் கூறப்பட்டுள்ளது.
காப்பியங்கள் ஒரேவகைச் செய்யுளாலும் அமையும்; பல வகைச் செய்யுட்களாலும் அமையும். பெருங்காப்பிய இலக்கணத்துள் சில... வாழ்த்துதல், தெய்வத்தை வணங்குதல், வருபொருள் உரைத்தல் என்ற மூன்றில் ஒன்றினைத் தொடக்கத்தில் பெற்று வரும். அவற்றுள் இரண்டோ மூன்றோ வரலாம்.
அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கும் பெருங்காப்பியத்தின் திரண்ட பொருளாக அமைந்திருக்க வேண்டும். எனினும் இவற்றுள் பாவிகத்திற்கு ஏற்றவண்ணம் ஒன்றும் பல வும் சிறப்பாக அமைந்திருக்க வேண்டும். தன்னிகர் இல்லாத் தன்மை உடையவனைக் காப்பியத் தலைவனாகக் கொண்டிருத்தல் வேண்டும். மலை( ), கடல்( ), நாடு( ), நகர்( ), சிறுபொழுது( - ), பெரும்பொழுது( - ), கதிரவன் தோற்றம்( ), சந்திரனின் தோற்றம்( ) உள்ளிட்ட பதினெட்டு உறுப்புகளும் இயற்கை வருணனைகளாக அமைதல் வேண்டும்.
எண்வகைச் சுவையும் மெய்ப்பபாட்டுக் குறிப்புகளும் கேட்போர் விரும்பும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். சிலப்பதிகாரம் முதலான ஐம்பெருங்காப்பியங்களும் சிறப்பு வாய்ந்தவையே. எனினும், பெருங்காப்பியத்திற்குரிய நான்குவகை உறுதிப் பொருள்களும் பிற உறுப்புகளும் முழுமையாக அமையப்பெற்று விளங்கும் காப்பியம் சீவகசிந்தாமணியே என்பர். சிறுகாப்பியம் அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கனுள் ஒன் றோ இரண்டோ குறைந்து வருவது சிறுகாப்பியம் ஆகும்.
பாவிகம் காப்பியத்தின் பண்பாகப் ‘பாவிகம்’ என்பதைத் தண்டியலங்காரம் குறிக்கின்றது. காப்பியத்தில் கவிஞன் வலியுறுத்த விரும்பும் அடிப்படைக் கருத்தினையே பாவிகம் என்பர். “பிறனில் விழைவோர் கிளையொடுங் கெடுப” என்பது கம்பராமாயணத்தின் பாவிகம். “அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும், உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர், ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்” என்பது சிலப்பதிகாரத்தின் பாவிகம்.
Related topics
Want this shaped for your exam marks?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →