Samacheer Kalvi · SSLC - English Medium · Tamil · Page 183grammar_exercise

108. கயமை - எளிய உரை

Chapter 39: 10th Tamil · Tamil · TA medium

From your actual textbook ✓

What does your textbook say about 108. கயமை - எளிய உரை?

. கயமை - எளிய உரை கயவர் மக்கள் போன்றே இருப்பர் அன்ன வடிவொற்றுமையை யாம் கண்டதில்லை. . மெய்யறிஞர் போலக் கயவரும் மகிழ்வுடையர்; ஏன்? மனத்தில் எதற்கும் கவலை ப் படார். . கயவர்கள் அரசர் போன்றவர்கள்; ஏன்? தாம் விரும்பியபடியே நடப்பார்கள். . கயவர் தம்மினும் இழிந்தவரைக் கண்டால் அவரால் போற்றப்பட்டு இறுமாப்பர். . அச்சமே கயவர்களின் இயல்பு; புகழாசை இருந்தால் சிறிது இருக்கலாம். . கயவர் அறிவிக்கும் பறைபோல்வர்; ஏன்? மறைச்செய்தியைப் பிறரிடம் போய்க்கூறுவர். . பல்லை உடைக்கும் கொடுங்கையர்க்கு அன்றிக் கயவர்கள் எச்சிற்கையும் உதறமாட்டார்கள். . சொன்ன அளவிலே பயன்செய்வர் மேலோர்; கரும்புபோல் நசுக்கின் பயன்செய்வர் கீழோர். . உண்டு உடுத்து நடப்பதைக் கண்டாலே அவர்கள்மேல் குற்றஞ் சுமத்துவான் கயவன். . எதற்கு தகுதி கயவர்?

📖 10th Tamil Textbook · Page 183

Read from the source

Complete lesson

. கயமை - எளிய உரை கயவர் மக்கள் போன்றே இருப்பர் அன்ன வடிவொற்றுமையை யாம் கண்டதில்லை. . மெய்யறிஞர் போலக் கயவரும் மகிழ்வுடையர்; ஏன்?

மனத்தில் எதற்கும் கவலை ப் படார். . கயவர்கள் அரசர் போன்றவர்கள்; ஏன்? தாம் விரும்பியபடியே நடப்பார்கள்.

. கயவர் தம்மினும் இழிந்தவரைக் கண்டால் அவரால் போற்றப்பட்டு இறுமாப்பர். . அச்சமே கயவர்களின் இயல்பு; புகழாசை இருந்தால் சிறிது இருக்கலாம்.

. கயவர் அறிவிக்கும் பறைபோல்வர்; ஏன்? மறைச்செய்தியைப் பிறரிடம் போய்க்கூறுவர். .

பல்லை உடைக்கும் கொடுங்கையர்க்கு அன்றிக் கயவர்கள் எச்சிற்கையும் உதறமாட்டார்கள். . சொன்ன அளவிலே பயன்செய்வர் மேலோர்; கரும்புபோல் நசுக்கின் பயன்செய்வர் கீழோர். .

உண்டு உடுத்து நடப்பதைக் கண்டாலே அவர்கள்மேல் குற்றஞ் சுமத்துவான் கயவன். . எதற்கு தகுதி கயவர்? ஏதும் கிடைப்பின் விரைந்து தன் மானத்தை விற்கத் தகுதி.

வான்புகழ் வள்ளுவரின் அறக்கருத்துகள் மாணவரிடம் சென்று சேர வே ண்டும்; அதன்வழி நன்னெறிப் பண்புகள் மாணவரிடையே வளர வே ண்டும் என்ற நோFோக்கில் புதிய பாடத்திட்டத்தில் திருக்குறளின் பாக்கள் சேர்க்கப்பட்டுள்ளன. திருக்குறளை நாள்தோறும் வழிபாட்டுக் கூட்டத்தில் பொருளுடன் கூறலாம். நாள்தோறும் ஒரு திருக்குறளைப் பொருளுடன் பள்ளியின் தகவல்பலகையில் காட்சிப்படுத்தலாம். திருக்குறள் ஒப்பித்தல் போட்டியை வகுப்புவாரியாக நடத்தலாம்.

திருக்குறள் கலைவிழாக்கள், ஓவியக் கண்காட்சிகள், நாடக விழாக்கள், குறளின் பொருளை வாழ்வியல் அனுபவங்களோடு பொருத்துதல், குறளை இசையமைத்துப் பாடுதல் போன்ற நிகழ்வுகளைப் பள்ளிகளில் ஒருங்கிணை க்கலாம். இலக்கிய மன்றக் கூட்டங்களில் குறட்பாக்கள் தொடர்பான கதைகள் சொல்லாம்; நாடகங்களை நடத்தலாம். குறட்பாக்கள் தொடர்பான வினாக்களைத் தொகுத்து " வினாடி வினா" நடத்தலாம். பள்ளி சார்ந்த அழைப்பிதழ்கள், பரிசுச் சான்றிதழ்களில் திருக்குறளை அச்சிட்டு வழங்கலாம்.

உலகப் பொதுமறையாம் திருக்குறளில் இடம்பெற்றிருக்கும் நன்னெறிக் கருத்துகளின் அடிப்படையில் நீதிக்கதைகள், இசைப்பாடல்கள், சித்திரக் கதைகள், அசைவூட்டப் படங்கள் வாயிலாகத் திருக்குறள் வளங்களை மாணவர்களிடம் கொண்டு சேர்க்கலாம். குறிப்பு: மாணவர்கள் எளிதில் படித்துப் புரிந்துகொள்வதற்கு ஏற்றவகையில் குறட்பாக்களின் சொற்கள் பிரித்துத் தரப்பட்டுள்ளன; அலகிடுவதற்கு அன்று.

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →