14. ஒழுக்கம் உடைமை - எளிய உரை
Chapter 39: 10th Tamil · Tamil · TA medium
Read from the source
Complete lesson
. ஒழுக்கம் உடைமை - எளிய உரை ஒழுக்கம் பெருஞ்சிறப்புத் தரும் ஆதலின் உயிர் கொடுத்தும் காக்க வேண்டும். . எவ்வளவு வருந்தினாலும் ஒழுக்கமாக இரு; எவ்வளவு ஆராய்ந்தாலும் அதுவே துணை. . விடா ஒழுக்கமே உயர்ந்த குடிப்பிறப்பு; ஒழுக்கத்தை விடுவது விலங்குப் பிறப்பு. . கற்பவன் மறந்தாலும் படித்துக் கொள்ளலாம்; மானிட ஒழுக்கம் குறைந்தாலோ கெடுவான். . பொறாமைப் பட்டவனுக்கு வளர்ச்சி உண்டோ? ஒழுக்கம் கெட்டவனுக்கு உயர்வுண்டோ? . உரமுடையவர் ஒழுக்கம் சிறிதும் தளரார்; தளரின் துன்பம் பல வருமென்று அறிவார். . விடா ஒழுக்கத்தால் முன்னேற்றம் வரும்; விடுவதால் பொருந்தாப் பழி வரும். . நல்லொழுக்கம் நன்மைக்கெல்லாம் வித்து; தீயொழுக்கத்தால் எந்நாளும் துன்பமே. . என்றும் ஒழுக்கம் உடையார் வாயிலிருந்து தவறியும் தீய சொற்கள் தோன்றா. . உலகத்தோடு ஒட்டி ஒழுகத் தெரியாதவர் பல கற்றிருந்தும் அறிவு இல்லாதவரே.
Related topics
Want this shaped for your exam marks?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →