அகப்பொருள் இலக்கணம்
Chapter 39: 10th Tamil · Tamil · TA medium
From your actual textbook ✓
What does your textbook say about அகப்பொருள் இலக்கணம்?
அகப்பொருள் இலக்கணம் இலக்கியப் பாடல்களில் கருத்து எவ்வாறு அமையும் என்பதைப் பொருள் இலக்கணம் வரையறுக்கிறது. பொருள் இலக்கணம் தமிழ்மொழிக்கு மட்டுமே உரியது. இது அகப்பொருள், புறப்பொருள் என இரண்டு வகைப்படும். ஒத்த அன்புடைய தலைவன், தலைவி ஆகிய இருவருக்கும் இடையிலான உறவுநிலைகளைக் கூறுவது அகத்திணை ஆகும். திணை என்பது ஒழுக்கம் எனப்படும். அகத்திணைக்குள் அடங்காதன எல்லாம் புறத்திணையாகும். அகத்திணைகள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, கைக்கிளை, பெருந்திணை என ஏழு வகைப்படும். அவற்றுள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்பன அன்பின் ஐந்திணைகள் எனப்படும். இவற்றின் அடிப்படையில் அகப்பாடல்கள் எழுதப்பட்டன. அகப்பாடலுக்குரிய கூறுகள் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்பனவாகும்.
📖 10th Tamil Textbook · Page 116
Read from the source
Complete lesson
அகப்பொருள் இலக்கணம் இலக்கியப் பாடல்களில் கருத்து எவ்வாறு அமையும் என்பதைப் பொருள் இலக்கணம் வரையறுக்கிறது. பொருள் இலக்கணம் தமிழ்மொழிக்கு மட்டுமே உரியது. இது அகப்பொருள், புறப்பொருள் என இரண்டு வகைப்படும். ஒத்த அன்புடைய தலைவன், தலைவி ஆகிய இருவருக்கும் இடையிலான உறவுநிலைகளைக் கூறுவது அகத்திணை ஆகும்.
திணை என்பது ஒழுக்கம் எனப்படும். அகத்திணைக்குள் அடங்காதன எல்லாம் புறத்திணையாகும். அகத்திணைகள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, கைக்கிளை, பெருந்திணை என ஏழு வகைப்படும். அவற்றுள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்பன அன்பின் ஐந்திணைகள் எனப்படும்.
இவற்றின் அடிப்படையில் அகப்பாடல்கள் எழுதப்பட்டன. அகப்பாடலுக்குரிய கூறுகள் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்பனவாகும். நிலமும் பொழுதும் முதற்பொருளில் அடங்கும். நிலம் தமிழர்கள் நிலத்தை ஐந்து வகையாகப் பிரித்து வாழ்ந்தனர்.
திணை நிலம் குறிஞ்சி மலையும் மலை சார்ந்த இடமும் முல்லை காடும் காடு சார்ந்த இடமும் மருதம் வயலும் வயல் சார்ந்த இடமும் நெய்தல் கடலும் கடல் சார்ந்த இடமும் பாலை சுரமும் சுரம் சார்ந்த இடமும். பொழுது பெரும்பொழுது, சிறுபொழுது என பொழுது இருவகைப்படும். பெரும்பொழுது பெரும்பொழுது என்பது ஓர் ஆண்டின் ஆறு கூறுகளாகும். கூறுகள் மாதங்கள் கார்காலம் ஆவணி, புரட்டாசி குளிர்காலம் ஐப்பசி, கார்த்திகை முன்பனிக் காலம் மார்கழி, தை பின்பனிக் காலம் மாசி, பங்குனி இளவேனிற் காலம் சித்திரை, வைகாசி முதுவேனிற் காலம் ஆனி, ஆடி
Related topics
Want this shaped for your exam marks?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →