அரசியல் அறம்
Chapter 39: 10th Tamil · Tamil · TA medium
From your actual textbook ✓
What does your textbook say about அரசியல் அறம்?
அரசியல் அறம் சங்கப் பாக்களில் அறம் பற்றிய அறிவுரைகள் பெரும்பாலும் அரசர்களை முதன்மைப்படுத்தியே கூறப்பட்டுள்ளன. 'அறநெறி முதற்றே அரசின் கொற்றம்', ‘அறன் நெறி பிழையாத் திறனறி மன்னர்’ மன்னர்களுடைய செங்கோலும் வெண்கொற்றக்குடையும் அறத்தின் குறியீடுகளாகப் போற்றப்பட்டன. அரசன் செங்கோல் போன்று நேரிய ஆட்சியை மேற்கொள்ள வேண்டும் என்பது பல பாடல்களில் வலியுறுத்தப்பட்டுள்ளது. நீர்நிலை பெருக்கி நிலவளம் கண்டு உணவுப்பெருக்கம் காண்பதும் அதனை அனைவருக்கும் கிடைக்கச் செய்வதும் அரசனின் கடமையாகச் சொல்லப்பட்டது. குற்றங்களை, அறத்தின் அடிப்படையில் ஆராய்ந்து தண்டனை வழங்க வேண்டும் என்கிறார் ஊன் பொதிப் பசுங்குடையார். அரசன் அறநெறியில் ஆட்சிசெய்வதற்கு அமைச்சரும் உதவினர்.
📖 10th Tamil Textbook · Page 155
Read from the source
Complete lesson
அரசியல் அறம் சங்கப் பாக்களில் அறம் பற்றிய அறிவுரைகள் பெரும்பாலும் அரசர்களை முதன்மைப்படுத்தியே கூறப்பட்டுள்ளன. 'அறநெறி முதற்றே அரசின் கொற்றம்', ‘அறன் நெறி பிழையாத் திறனறி மன்னர்’ மன்னர்களுடைய செங்கோலும் வெண்கொற்றக்குடையும் அறத்தின் குறியீடுகளாகப் போற்றப்பட்டன. அரசன் செங்கோல் போன்று நேரிய ஆட்சியை மேற்கொள்ள வேண்டும் என்பது பல பாடல்களில் வலியுறுத்தப்பட்டுள்ளது. நீர்நிலை பெருக்கி நிலவளம் கண்டு உணவுப்பெருக்கம் காண்பதும் அதனை அனைவருக்கும் கிடைக்கச் செய்வதும் அரசனின் கடமையாகச் சொல்லப்பட்டது.
குற்றங்களை, அறத்தின் அடிப்படையில் ஆராய்ந்து தண்டனை வழங்க வேண்டும் என்கிறார் ஊன் பொதிப் பசுங்குடையார். அரசன் அறநெறியில் ஆட்சிசெய்வதற்கு அமைச்சரும் உதவினர். ' நன்றும் தீதும் ஆய்தலும் அன்பும் அறனும் காத்தலும் அமைச்சர் கடமை ' என்கிறது மதுரைக்காஞ்சி. யம் அறம் கூறும் மன்றங்கள், அரசனின் அறநெறி ஆட்சிக்குத் துணைபுரிந்தன.
அறம் கூறு அவையம் பற்றி’ அறம் அறக் கண்ட நெறிமாண் அவையம் ’ என்கிறது புறநானூறு. உறையூரிலிருந்த அறஅவையம் தனிச்சிறப்புப் பெற்றது என்று இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. மதுரையில் இருந்த அவையம் பற்றி மதுரைக்காஞ்சி குறிப்பிடுகிறது.
Related topics
Want this shaped for your exam marks?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →