சங்க இலக்கியத்தில் அறம்
Chapter 39: 10th Tamil · Tamil · TA medium
Read from the source
Complete lesson
சங்க இலக்கியத்தில் அறம் மனிதன் தனியானவன் அல்லன். அவன் சமூகக் கடலின் ஒருதுளி. அவனுக்குள்ளே சமூகம் – சமூகத்துக்குள்ளே அவன். மனிதன் எல்லாரோKோடும் எல்லாவற்றோடும் எவ்வளவுக்கெவ்வளவு தன்னை இணைத்துக் கொள்கிறானோ அவ்வளவுக்கவ்வளவு அவனுடை ய மகிழ்ச்சி பெருகுகிறது. இந்த மகிழ்ச்சிப் பெருக்கில் திளை க்க வே ண்டும் என்றால் அனை த்தையும் ஊடுருவிச் செல்லும் பொதுவிதியான அறத்தை மனிதன் ஏற்க வே ண்டும். சங்க காலத்திற்குப் பிந்தைய அற இலக்கியங்களின் காலத்தை அறநெறிக்காலம் என்பர். அறநெறிக்கால அறங்கள் சமயம் சார்ந்தவை. ஆனால், சங்ககால அறங்கள் இயல்பானவை. சங்ககால வாழ்க்கையில் இருந்து உருவான அறங்களே சங்க இலக்கியத்தில் பதிவு பெற்றுள்ளன. சங்க அறங்கள், சமயங்களிடமிருந்து இரவல் பெறப்பட்டவை அல்ல.
Related topics
Want this shaped for your exam marks?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →