புத்தகப்பித்தன்
Chapter 39: 10th Tamil · Tamil · TA medium
Read from the source
Complete lesson
புத்தகப்பித்தன் எனக்கு உலகியல் அறிவு தோன்றிய நாள்தொட்டு இயன்றவரை தாய்மொ ழியிலே னும் நல்ல புலமை பெ ற்றிட வே ண்டும் என்று விரும்பி, அதற்காக இடை விடாது முயன்று வந்திருக்கிறே ன். சுருங்கச்சொன்னால், என் அறியாமை யுடன் கடும்போர் நடத்தியிருக்கிறேன். நூல் வாங்குவதற்குப் போHோதிய பணமில்லாத குறையால் பழைய புத்தகங்கள் விற்கும் கடைகளுக்குச் சென்று, எனக்கு விருப்பமான புத்தகங்களை, மிகமிகக் குறைந்த விலைக்கு வாங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். உணவுக்காக வைத்திருக்கும் பணத்தில் புத்தகங்களை வாங்கிவிட்டு, பல வேளைகளில் பட்டினி கிடந்திருக்கிறேன். குறைந்த விலைக்கு நல்ல நூலொன்று கிடைத்துவிட்டால் பேரானந்தம் அடைவேன். என் வாழ்நாளில் நானாக முயன்று சேர்த்துவைத்துள்ள சொத்துகள் என்னிடமுள்ள பல்லாயிரக்கணக்கான நூல்களைத் தவிர வேறில்லை என்று உறுதியாகக் கூறுவேன்.
Related topics
Want this shaped for your exam marks?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →