தெற்கெல்லைப் போராட்டம்
Chapter 39: 10th Tamil · Tamil · TA medium
Read from the source
Complete lesson
தெற்கெல்லைப் போராட்டம் தாய்த்தமிழக மக்களில் பலர் தெற்கெல்லைக் கிளர்ச்சியோடு எனக்குள்ள தொடர்பை அறியமாட்டார்கள். நான் முதன்முதலில் ஈடுபட்டது தெற்கெல்லைக் கிளர்ச்சியில்தான். அக்டோபர் 25இல் நாகர்கோவில் நகரின் ஒரு பகுதியான வடிவீசுவரத்தில் வடிவை வாலிபர் சங்கத்தின் ஆண்டு விழாவில் பேசினேன். அதுதான் தெற்கெல்லைக் கிளர்ச்சி பற்றிய எனது முதல் பேச்சு. அந்நாளில் திருவிதாங்கூர் சமஸ்தானம் தனி அரசாக இருந்தது. நான் சிலப்பதிகாரக் காப்பியத்தை மக்களிடம் கொண்டுசெல்ல விரும்பியதற்குக் காரணமுண்டு; திருக்குறளையோ, கம்பராமாயணத்தையோ விரும்பாதவனல்லன். ஆயினும் இந்திய தேசிய ஒருமைப்பாட்டிற்குக் கேடில்லாத வகையில், தமிழினத்தை ஒன்றுபடுத்த எடுத்துக்கொண்ட முயற்சிக்குப் பயன்படக்கூடிய ஓர் இலக்கியம் தமிழில் உண்டென்றால், அது சிலப்பதிகாரத்தைத் தவிர வேறில்லையென்று உறுதியாகக் கூறுவேன். இளங்கோ தந்த சிலம்பு, தமிழினத்தின் பொதுச்சொத்து. எனவேதான் தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் சிலப்பதிகார மாநாடுகள் நடத்தினோGோம். சிலம்புச் செல்வர் ம.பொ.சி.
Related topics
Want this shaped for your exam marks?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →