Samacheer Kalvi · SSLC - English Medium · Tamil · Page 132poem

சிற்றகல் ஒளி

Chapter 39: 10th Tamil · Tamil · TA medium

Read from the source

Complete lesson

சிற்றகல் ஒளி இந்திய விடுதலைப் போHோராட்ட வரலாற்றில் 1906ஆம் ஆண்டு, மிகவும் சிறப்புடைய ஆண்டாகக் கருதப்படுகிறது. அவ்வாண்டில். வ. உ. சிதம்பரனார் ஆங்கிலேயர்களுக்கு எதிராகச் சுதேசிக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கினார். இத்தகைய சிறப்புள்ள ஆண்டில் ஜூன் 26ஆம் நாள், சென்னை ஆயிரம்விளக்கு வட்டம் சால்வன்குப்பம் என்னும் பகுதியில் நான் பிறந்தேன். என் தந்தையார் பெயர் பொHொன்னுசாமி. அன்னையின் பெயர் சிவகாமி. பெற்றோர் எனக்கு இட்ட பெயர் ஞானப்பிரகாசம். ஆனால் சரபையர் என்ற முதியவர் ஒருவர், என்னுடைய பெயரை மாற்றி ‘ சிவஞானி’ என்றே அழைத்தார். பின்னாளில் அவர் எனக்கிட்டு அழைத்த சிவஞானி என்னும் பெயரே சிறிது திருத்தத்துடன் சிவஞானம் என்று நிலைபெற்றது. கதை கேட்கும் வழக்கம் சிறிய வயது முதல் அனைGவருக்கும் இருக்கிறது. கேட்பது குறைந்துபோய்க் கதை படிப்பது அதன் அடுத்த படிநிலை. அதுவே ஒருவரைப் படிப்பாளியாகவும் படைப்பாளியாகவும் பக்குவப்படுத்துகிறது. அப்படியான ஒரு படைப்பாளி தன்னைG முன்வைத்துத் தன் நாட்டின் வரலாற்றைக் கூறும்நிலை சிலருக்கு மட்டுமே வாய்த்திருக்கிறது. வரலாற்றின் போக்கினைG மாற்றி வடிவமைத்தவர்களின் வாழ்க்கைக் கதையைத் தன்வரலாறாகப் படிப்பது, நம்மையும் அந்த வரலாற்றுப் பாத்திரமாக உணரவைக்கும்!

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →