10th Tamil
Chapter 39: 10th Tamil · Tamil · TA medium
Read from the source
Complete lesson
ஞர் இயற்பெயர் மறைந்து இட்டபெயர் நிலைக்கும் அளவுக்குக் கலைஞர் மு.கருணாநிதி அவர்களை அடையாளப்படுத்தித் தன்னைGப் பெருமைப்படுத்திக் கொண்டது கலை! அவரைப் பற்றிப் பேராசிரியர் அன்பழகனார், “கலைஞர் பகுத்தறிவுக் கொள்கை பரப்பும் சிந்தனைGயாளர்; பழுமரக்கனிப் பயன்கொள்ளும் பேச்சாளர்; படித்தவரைக் கவரும் ஆற்றல்கொண்ட எழுத்தாளர்; கலைத்துறையில் வாகை டிய படைப்பாளர்; தொட்டது துலங்கத் துறைதோறும் தம் முத்திரை பதிக்கும் திறமையாளர்; முத்தமிழிலும் வல்ல வித்தகர்; செந்தமிழுக்கொரு தீமை எனில் தம்முயிரும் தந்திடத் துணியும் தியாகத் திருவுருவம்!” என்பார். ஞர் "நானும் தங்கையும் மழையைக் கண்டாலே மயில் போலக் குதிப்போ ம் முன்பெல்லாம். மழைத்துளிகளிலே நிற்பதைவிட ஆனந்தம் வே று இல்லை என்று எண்ணுவோம். 'உடம்புக்கு ஆகாது. உள்ளே வாங்க' என்று பாட்டி அன்பாகக் கோபிக்கிற வரையிலே மழை யிலே நனை ந்துகொண்டு ஆடுவோம்; பாடுவோம். வீட்டுக்குள்ளே வந்துவிட்டால்கூட, திண்ணையிலே அமர்ந்து மழையை இரசிப்போ ம். தெருவிலே சிறுசிறு வாய்க்ககால்கள் போல நெளிந்தோடும் மழை த் தண்ணீரிலே நாங்கள் மிதக்க விட்டிருக்கிற காகிதப் படகுகள் - எவ்வளவு!" தாம் எழுதிய புதையல் என்னும் புதினத்தில் குழந்தை உள்ளத்துடன் இவ்வாறு பதிவு செய்திருப்பார் கலைஞர். படிக்கும் வாசகர் மனமும் கூடவே மழை யில் நனை யும்! இசை முகிழ்த்த புலமும் வேளாண் செழித்த நிலமுமான திருவாரூர் மாவட்டத்தின் எழில் ழ்ந்த சிற்றூர், திருக்குவளை. அவ்வூரில் 1924ஆம் ஆண்டு ன் திங்கள் 3ஆம் நாள், ஏரால் நிலத்தையும் நாவால் தமிழையும் பண்படுத்திய விவசாயக்கவிஞர் முத்துவேலருக்கும் அஞ்சுகம் அம்மையாருக்கும் மூன்றாவது மகனாகப் பிறந்தார் கலைஞர் கருணாநிதி. ஞர் தாம் பிறந்த திருக்குவளை யில் தொடக்க் கல்வியை நிறைவுசெ ய்த கலைஞர், திருவாரூரில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்ததார். அங்குதான் தமக்கு அரசியல் அரிச்சுவடியாக அமை ந்த ஒரு புத்தகத்தைத் துணை ப்பாடமாகப் படித்தார் மாணவர் கலைஞர். 1921இல் சென்னை மாகாணத்திற்கு நீதிக்கட்சியின் சார்பில் முதல் அமை ச்சராக இருந்த பனகல் அரசரின் சாதனை களை க் கூறும் நூல் அது. பள்ளி முடிந்த மாலைவேளை களில் தாம் எழுதிய ‘வாருங்கள் எல்லோ ரும் போருக்குச் சென்றிடுவோம்!’ என்று தொடங்கும் பாடலை முழங்கியபடி, இந்தித் திணிப்பை எதிர்த்துப் போராட மாணவர்களைத் திரட்டித் திருவாரூர் வீதிகளில் ஊர்வலம் வந்தபோது அவருக்கு வயது பதினான்கு. போராட்டப் பண்புடனே வளர்ந்தவர் கலைஞர்! அந்தப் போராட்டப் பண்பே அவருக்குள் இருந்த கலைத்தன்மையை வளர்த்து. ஞர் இளமைப்பருவத்திலேயே தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கருத்துகள் கலைஞரை ஈர்த்தன; பட்டுக்கோட்டை அழகிரி, அறிஞர் அண்ணா ஆகியோரின் பேச்சாற்றல் ஞர் தமக்கே உரிய தனிநடையால் தமிழரை மேடை நாடகங்களின் பக்கம் ஈர்த்தார் கலைஞர். அவர் எழுதிய ‘பழநியப்பன்’ என்னும் முதல் நாடகம், 1944ஆம் ஆண்டு அரங்கேற்றப்பட்டது. அதனைGத் தொடர்ந்து ‘சாம்ராட் அசோகன், மணிமகுடம், வெள்ளிக்கிழமை, காகிதப்பூ’ உட்பட பல நாடகங்களை எழுதினார். தாம் எழுதிய ’தூக்குமேடை’ என்னும் நாடகத்தில் நடிகர் எம்.ஆர்.இராதாவின் வேண்டுகோளுக்காக மாணவர் தலைவராகக் கருணாநிதி நடித்தார். அந்நாடகத்திற்கான பாராட்டுவிழாவில்தான் அவருக்குக் ‘கலைஞர்’ என்னும் சிறப்புப்பெயர் வழங்கப்பட்டது. அதுவே பின்னாளில் மக்கள் அவரை அன்புடன் அழைக்கும் பெயரானது. ஞர் கலைஞரின் திறமையை உணர்ந்த இயக்குநர் ஏ.எஸ்.ஏ.சாமி, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். முதன்முதலாக நடித்த ‘ராஜகுமாரி’ ( ) படத்துக்கான முழுவசன த்தையும் எழுதச் சொன்னார். படம் மிகப்பெரிய வெ ற்றி அடைந்து. கலைஞரின் கதை, வசன த்தில், எம். ஜி. ஆரின் நடிப்பில், ‘ மருதநாட்டு இளவரசி’ , ’ மந்திரிகுமாரி’ , ‘ நாம்’ , ‘ மலைக்கள்ளன்’ முதலான படங்கள் தொடர்ந்து வெளிவந்தன. கலைஞரின் வசன ங்கள் “சொல் புதிது சுவை புதிது” என்று கேட்போர் வியக்கும் வண்ணம் அமைந்தன. தமிழ்த் திரையுலகின் திருப்பு முனைGயாகப் பாவலர் பாலசுந்தரம் கதை எழுதிய ‘ பராசக்தி’ க்குத் திரைக்கதை, வசன ம் எழுதினார் கலைஞர். படம் வெளிவந்த மறுநாள், பாரெங்கும் பராசக்தி பற்றித்தான் பேச்சு! நீதிமன்றக் காட்சி உட்பட அவரது கருத்தாழமிக்க, கலைநயமிக்க வசன ங்களுக்குத் தம் நடிப்பாலும் உச்சரிப்பாலும் உயிர்கொடுத்தார் சிவாஜி. தமது முதல் படத்திலேயே நடிப்பின் உச்சத்தைத் தொட்டார் சிவாஜிகணேசன்! கதை வசன த்தின் சிகரத்தைத் தொட்டார் கலைஞர்! அதன் பிறகு, சிவாஜிகணேசனின் நடிப்பில் உருவான ‘திரும்பிப் பார்’, ‘மனோGோகரா’, 'ராஜாராணி' முதலிய திரைப்படங்களும் கலைஞரின் கதை, வசன த்தில் வெற்றிப் படங்களாக அமைந்தன. அறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ கதைக்குக் கலைஞரின் வசன ங்களைப் பேசி நடித்தார் சிவாஜிகணேசன். இந்தப்படத்தில் இடம்பெற்ற பதினொGொரு பாடல்களில் நான்கினைG எழுதினார் கலைஞர். மந்திரிகுமாரி தொடங்கிப் பல படங்களில் கலைஞர் எழுதிய திரைப்படப் பாடல்களும் புகழ் அடைந்தன. ‘மறக்க முடியுமா?’ என்னும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘காகித ஓடம் கடல் அலை மேலே’ என்னும் பாடல், காலத்தால் மறக்க முடியாத, மக்கள் மனத்தில் இடம்பிடித்த பாடலாகும். வெறும் அடுக்குமொழி வசன ங்களால் மட்டுமே புகழடைந்தாரல்லர் கலைஞர். அவரது வசன ங்கள் கேட்பவர்களுக்கு மொழி இன்பத்தைக் கூட்டுபவை; முற்போக்குச் சிந்தனைGகளை ஊட்டுபவை. ஞர் திராவிட இயக்கத் தலைவர்கள் பெரும்பாலோர் இதழாசிரியர்களாக இருந்திருக்கின்றனர். அவ்வகையில் இளம் வயதிலேயே கலைஞர் ‘மாணவ நேசன்’ என்னும் கையெழுத்து ஏட்டை நடத்தினார். அப்பயிற்சி தந்த ஊக்கத்தால், அண்ணாவின் ‘திராவிட நாடு’ இதழில் தம் முதல் கட்டுரையை எழுதினார். அப்போ து அவருக்கு வயது பதினெ ட்டு. அதே ஆண்டில், ‘முரசொலி வெ ளியீட்டுக் கழகம்’ என்ற பெயரில் நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார். ‘முரசொலி’ ஏட்டைக் கையெழுத்து இதழாகத் தொடங்கி, வாரஇதழாக்கி, நாளே டாக்கினார். இன்றளவும் அது தொடர்ந்து நடத்தப்படுகிறது. ‘சேரன்’ என்ற புனைபெயரில் அவர் பல கட்டுரைகளை எழுதினார். எழுத்தைத் தமது ஆயுதமாகக் கொண்டு அதன்மீது அளவற்ற நம்பிக்கை கொண்ட தலைவராகத் திகழ்ந்தவர் கலைஞர். தமது எண்ணங்களை, தமது விருப்பத்தை, கடைக்கோடித் தமிழனுக்கும் கொண்டுசெல்லும் ஏற்பாடாக அவர் கருதியது, ‘உடன்பிறப்புகளுக்கு’ எழுதிய கடிதங்களை! கலைஞரின் உரையை நேரில் கேட்டுச் சுவை த்தவர்கள், எத்தகைய உணர்வினை அடை வார்களோ, அதே உணர்வினை அடை யும்வகையில் அவரது கடிதங்களும் அமைந்திருக்கும். படிப்பவர்களை வசப்படுத்தும் ஆற்றல் பெற்ற எழுத்துகள் அவை ! தமிழ்நாட்டின் வரலாற்றை ஆய்வுசெய்ய நினைப்போ ரின் கருவூலங்கள் அவை ! ஞர் மலேசிய மண்ணில், சுபாஷ் சந்திரபோசின் இந்திய தேசிய இராணுவத்தைச் சேர்ந்த தமிழ்நாட்டு வீரர் ‘மலேயா கணபதி’ என்பவர், ஆங்கிலேயரால் தூக்கிலிடப்பட்டு இறந்ததை அறிந்து கலைஞர் ‘கயிற்றில் தொங்கிய கணபதி’ என்ற சிறிய கட்டுரை நூலை எழுதியபோது அவருக்கு வயது இருபத்து இரண்டு. அனைGத்து இந்தியர்களிடமும் இருந்த ஆங்கிலேய எதிர்ப்புணர்வு, கலைஞரிடம் இருந்தது என்பதைக் காட்டும் நூல் இது. தமிழ்மீது தீராத பற்று கொண்ட கலைஞர், இலக்கியத்திலும் பெரும்பங்காற்றினார். நளாயினி, சித்தார்த்தன் சிலை, சந்தனக் கிண்ணம், தாய்மை, புகழேந்தி, அணில்குஞ்சு உள்ளிட்ட பல சிறுகதைகளையும் ரோமாபுரிப் பாண்டியன், பொன்னர் சங்கர், தென்பாண்டிச்சிங்கம், ஒரே ரத்தம் உள்ளிட்ட புதினங்களையும் எழுதியுள்ளார். தம் வாழ்க்கை வரலாற்றை ‘நெஞ்சுக்கு நீதி’ என்னும் தலைப்பில் ஆறு பாகங்களாக எழுதி வெளியிட்டுள்ளார். தம், தமிழார்வம் ஞர் “கவியரங்குகளே தமக்கு இளைப்பாறும் இன்னிழல் சோலைகளாயின!” என்பார் கலைஞர். அறிஞர் கூடும் கவியரங்கத்தை, மக்கள் கூடும் கவியரங்கமாக்கியவர் அவர். பாமரரும் புரிந்துகொள்ளும் எளிமையும் இதயம் தொடும் இனிய சந்தமும் வாய்ந்தவை கலைஞரின் கவிதைகள். கலைஞர் இயற்றியுள்ள கவிதைகள், ஒன்பது தொகுதிகளாக வெளிவந்துள்ளன. ‘புறநானூற்றுத்தாய்’ என்னும் தலைப்பிலமைந்த வசன கவிதையும் புகழ்பெற்ற ஒன்று. சிலப்பதிகாரத்தைப் பற்றிக் கலைஞர் எழுதிய பின்வரும் கவிதையைப் படிக்கப் படிக்க நெஞ்சில் சந்தம் எழும். சிறுசிறு சொற்களால் அமைந்த கவிப்பூ இது! “இந்த எட்டுச்சுவை பிட்டுத்தமிழ் கட்டித் தயிர் வட்டில்நிறை கொட்டித்தரப் பட்டுக்கொடிக் கொற்றக்குடை முத்துச்சரச் சோழனூர்வருவீரே!” அறிஞர் அண்ணா மறைந்தபின், வானொGொலியில் கலைஞர் பாடிய இரங்கற்பா, படிப்போ ரின் உள்ளத்தை உருக்கும். ... கண்மூடிக்கொண்டு நீ சிந்திக்கும் பேரழகைப் பார்த்துள்ளேன்... இன்று மண்மூடிக் கொண்டுன்னைGப் பார்க்காமல் தடுப்பதென்ன கொடுமை? கொடுமைக்கு முடிவு கண்டாய்; எமைக் கொடுமைக்கு ஆளாக்கி ஏன் சென்றாய்? எதையும் தாங்கும் இதயம் வேண்டுமென்றாய்; இதையும் தாங்க ஏதண்ணா எமக்கிதயம்? கடற்கரையில் காற்று வாங்கியது போதுமண்ணா எழுந்து வா எம் அண்ணா! வர மாட்டாய்; வர மாட்டாய், இயற்கையின் சதி எமக்குத் தெரியும் அண்ணா நீ இருக்குமிடந்தேடி யான் வரும் வரையில் இரவலாக உன் இதயத்தைத் தந்திடண்ணா... நான் வரும்போது கையோடு கொணர்ந்து அதை உன் கால் மலரில் வைப்பேன் அண்ணா! என முடியும் அந்த நீள்கவிதை! ஞர் ஐயன் திருவள்ளுவர்மீது அவருக்கிருந்த தீராத பற்றின் காரணமாக, தமிழ்நாட்டின் தலைநகராம் சென்னைGயில் வள்ளுவர் கோட்டமும் தெற்கெல்லையான குமரியில் வள்ளுவர் சிலையும் அமைத்தார். வள்ளுவர் கோட்டத்தில் திருவாரூர்க் கோவில் தேரின் மாதிரியில் கட்டப்பட்டுள்ள சிற்பத்தேர் பலரையும் கவர்வதாகும். இத்தேரினுள் திருவள்ளுவரின் சிலை வைக்கப்பட்டுள்ளது. அதன் கருவறை வாயிலில் தூண்கள் அழகுற ஞர் இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழிலும் தம் முத்திரை பதித்ததால் ‘முத்தமிழ் அறிஞர்’ என்று போற்றப்பட்டார். அவர் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த காலத்தில் தமிழ்மொழிக்குப் பெருமை சேர்க்கும் பல பணிகளை மேற்கொண்டார். குறிப்பாக, மனோGோன்மணீயம் சுந்தரனாரின் ’நீராருங் கடலுடுத்த’ என்னும் பாடலை அரசு விழாக்கள் அனைGத்திலும் வாழ்த்துப்பாடலாகப் பாடுவதற்கு வழிவகுத்தார். அத்துடன், கல்வித்துறையைப் பள்ளிக்கல்வி, உயர்கல்வி என இரண்டாகப் பிரித்ததோடு தமிழ் வளர்ச்சித்துறை எனப் புதிதாக ஒரு துறையை உருவாக்கி அதற்குத் தமிழறிஞர் ஒருவரையே அமைச்சராக்கி அழகு பார்த்தார். 2010ஆம் ஆண்டு கோவை யில், தமிழ்நாடு அரசின் சார்பில் கலைஞர், உலகத் தமிழ்ச் செம் மொழி மாநாட்டை நடத்தியபோது தமிழின் பெருமிதங்களை விளக்கிச் ‘செம் மொழியான தமிழ்மொழியாம்’ எனத் தொடங்கும் பாடலையும் இயற்றினார். இசை யமை ப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துப் பல்வேறு இசை வடிவங்களை ஒன்றிணை த்த இப்பாடலில், மூன்று தலைமுறைகளை ச் சேர்ந்த இசைக்கலைஞர்கள் பங்கேற்றனர். இம்மாநாட்டின் இலச்சினை யில் இருந்துபோலவே குமரியில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையின்கீழ், "பிறப்பொ க்கும் எல்லா உயிர்க்கும்" என்னும் தமிழரின் முதன்மை விழுமியத்தைப் பொறிக்கச் செய்தார். ஞர் தமிழின் பெருமிதங்களையும் விழுமியங்களையும் மீட்டெடுக்க எண்ணிய கலைஞர், அதற்கான பணிகளை த் தம் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்ததார். இலட்சக்கணக்கான பக்கங்கள் எழுதியதும் ஆயிரக்கணக்கான மேடைகளில் பேசியதும் அவர் அளவுக்குச் செ யல்பட்டதுமான தலைவர்கள் மிகக் குறைவு. இவ்வாறு, ‘உடல் மண்ணுக்கு; உயிர் தமிழுக்கு’ என்னும் கூற்றுக்குச் சான்றாக வாழ்ந்த கலைஞர், 2018ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7ஆம் நாள் தம் 94ஆம் வயதில் தமிழர் நெஞ்சில் என்றும் நிலைத்து நிற்கும் காவியமானார். கற்பவை கற்றபின்... . கவிதைக் கலைஞர் தலைப்பில் இடம்பெற்றுள்ள கவிதைகளை மேடையில் பேசுவது போல உரிய குரல் ஏற்ற இறக்கங்களுடன் படித்துக்காட்டுக. . பன்முகக்கலைஞரின் கலைப்பண்புகளுள் உங்களுக்குப் பிடித்த கலைப்பண்பு குறித்து வகுப்பறையில் கலந்துரையாடுக.
Related topics
Want this shaped for your exam marks?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →