ர்மதி (ராஜம் கிருஷ்ணன்) - எனது
Chapter 39: 10th Tamil · Tamil · TA medium
From your actual textbook ✓
What does your textbook say about ர்மதி (ராஜம் கிருஷ்ணன்) - எனது?
பள்ளிப் பருவத்தின் பசுமை மாறா நினைவுகள் நெஞ்சில் எழுகின்றன. வணக்கம். பெண்கள் என்றால் குடும்பக்கதை எழுதவேண்டும் என்ற படிமத்தை உடைத்துச் சமூகச் சிக்கல்களைக் கதைகளாக எழுதினேன். நான் கற்பனையாக எழுத விரும்பவில்லை. சமூகத்தில் இடர்ப்பட்ட மக்களைப் பற்றி எழுதும் முன்பு அந்த மக்கள் வாழும் பகுதிக்குள் சென்று களப்பணியாற்றிக் கதைகளாக உருவாக்கினேன். தூத்துக்குடியில் பல மாதம் தங்கியிருந்து உப்பளத் தொழிலாளர்களின் உவர்ப்பு வாழ்க்கையைக் “கரிப்பு மணிகள்” புதினமாக ஆக்கினேன். நீலகிரி, படுகர் இன மக்களின் வாழ்வியல் மாற்றங்களைக் குறித்து நான் பதிவு செய்ததே “குறிஞ்சித் தேன்” புதினம். கடலோர மீனவர் வாழ்வின் சிக்கல்களைப் பேசுவதே “அலைவாய்க் கரையில்” புதினம்.
📖 10th Tamil Textbook · Page 143
Read from the source
Complete lesson
பள்ளிப் பருவத்தின் பசுமை மாறா நினைவுகள் நெஞ்சில் எழுகின்றன. வணக்கம். பெண்கள் என்றால் குடும்பக்கதை எழுதவேண்டும் என்ற படிமத்தை உடைத்துச் சமூகச் சிக்கல்களைக் கதைகளாக எழுதினேன். நான் கற்பனையாக எழுத விரும்பவில்லை.
சமூகத்தில் இடர்ப்பட்ட மக்களைப் பற்றி எழுதும் முன்பு அந்த மக்கள் வாழும் பகுதிக்குள் சென்று களப்பணியாற்றிக் கதைகளாக உருவாக்கினேன். தூத்துக்குடியில் பல மாதம் தங்கியிருந்து உப்பளத் தொழிலாளர்களின் உவர்ப்பு வாழ்க்கையைக் “கரிப்பு மணிகள்” புதினமாக ஆக்கினேன். நீலகிரி, படுகர் இன மக்களின் வாழ்வியல் மாற்றங்களைக் குறித்து நான் பதிவு செய்ததே “குறிஞ்சித் தேன்” புதினம். கடலோர மீனவர் வாழ்வின் சிக்கல்களைப் பேசுவதே “அலைவாய்க் கரையில்” புதினம்.
அமைப்புசாரா வேளாண் தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டப்படுவதைச் சுட்டிக்காட்டியவையே “சேற்றில் மனிதர்கள்”, “வேருக்கு நீர்” ஆகிய புதினங்கள்.
Related topics
Want this shaped for your exam marks?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →