Samacheer Kalvi · SSLC - English Medium · Tamil · Page 54poem

உங்கள் கிராமத்திற்கு நூலக வசதி வேண்டி பொது நூலகத்துறை

Chapter 39: 10th Tamil · Tamil · TA medium

Read from the source

Complete lesson

உங்கள் கிராமத்திற்கு நூலக வசதி வேண்டி பொது நூலகத்துறை இயக்குநர் அவர்களுக்குக் கடிதம் வரைக. பூம்பாறை, . . அனுப்புநர் செ. தமிழரசன், , அன்னை இல்லம், காந்தி தெரு, பூம்பாறை, திண்டுக்கல் மாவட்டம் . பெறுநர் பொது நூலக இயக்குநர் அவர்கள், தமிழ்நாடு பொது நூலக இயக்குநரகம், சென்னை . ஐயா, பொருள் : நூலக வசதி வேண்டுதல் – சார்பு. வணக்கம். கற்றறிந்த சமுதாயத்தை உருவாக்கும் தங்கள் நூலகத்துறைக்கு எனது வாழ்த்துகள். எங்கள் கிராமத்தில் குடும்பங்களும் மக்களும் வசித்து வருகின்றனர். மேலும், எங்கள் கிராமத்தில் உயர்கல்வி முடித்து அரசு போட்டித் தேர்வுகளுக்குப் படிப்பவ ர்கள் நூற்றுக்கணக்கில் உள்ளன ர். நாங்கள் தேர்விற்குப் படிப்பதற்காக இருப்பிடத்திலிருந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நூலகத்திற்கு நாள்தோறும் சென்று வருகின்றோம். எங்கள் கிராமத்தில் கிளை நூலகம் அமைத்தால் எங்கள் கிராம மக்களுக்கும் எங்களைப்போன்று தேர்வுகளுக்குப் படிப்பவ ர்களுக்கும் மிகுந்த பயனைத்தரும். எனவே, எங்கள் கிராமத்தில் கிளை நூலகம் அமைத்திட ஆவன செய்யுமாறு தங்களைப் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு, தங்கள் உண்மையுள்ள, செ. தமிழரசன். உறைமேல் முகவ ரி பெறுநர் பொது நூலக இயக்குநர் அவர்கள், தமிழ்நாடு பொது நூலக இயக்குநரகம், சென்னை .

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →