எளிதுமன் மற்றும்தான் உள்ளியது உள்ளப் பெறின். XI Std Tamil குறிப்பு அறிதல் ) கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும் மாறாநீர் வையக்கு அணி. ) ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத் தெய்வ த்தோடு ஒப்பக் கொளல் . ) குறிப்பின் குறிப்புஉணர் வார உறுப்பினுள் யாது கொடுத்தும் கொளல் .
) குறித்தது கூறாமைக் கொள்வாரோடு ஏனை உறுப்புஓர் அனையரால் வேறு. ) குறிப்பின் குறிப்புஉணரா ஆயின் உறுப்பினுள் என்ன பயத்தவோ கண். ) அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம். ) முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும் காயினும் தான் முந் துறும்.
) முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி உற்றது உணர்வார்ப் பெறின். ) பகைமையும் கேண்மையும் கண்உரைக்கும் கண்ணின் வகைமை உணர்வார்ப் பெறின். ) நுண்ணியம் என்பார் அளக்கும்கோல் காணும்கால் கண்அல்லது இல்லை பிற. படைமாட்சி ) உறுப்புஅமைந்து ஊறுஅஞ்சா வெல்படை வேந்தன் வெறுக்கையுள் எல்லாம் தலை .
) உலைவிடத்து ஊறுஅஞ்சா வன்கண் தொலை விடத்துத் தொல்படைக்கு அல்லால் அரிது. ) ஒலித்தக்கால் என்ஆம் உவரி எலிப்பகை நாகம் உயிர்ப்பக் கெடும். ) அழிவுஇன்று அறைபோகாது ஆகி வழிவந்த வன்க ணதுவே படை. ) கூற்றுஉடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும் ஆற்ற லதுவே படை.
) மறம்மானம் மாண்ட வழிச்செலவு தேற்ற ம் எனநான்கே ஏமம் படைக்கு. ) தார்தா ங்கிச் செல்வது தானை தலை வந்த போர்தாங்கும் தன்மை அறிந்து. ) அடல்தகையும் ஆற்றலும் இல்எனினும் தானை படைத்தகையால் பாடு பெறும். ) சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும் இல்லாயின் வெல்லும் படை.
) நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை தலை மக்கள் இல்வழி இல். XI Std Tamil பகைத்திறம் தெரிதல் ) பகைஎன்னும் பண்பு இலதனை ஒருவன் நகையேயும் வேண்டற்பாற்று அன்று. ) வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க ச@ொல்லேர் உழவர் பகை. ) ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப் பல்லார் பகைகொள் பவன்.
) பகைநட்பாக் கொண்டுஒழுகும் பண்புடை யாளன் தகைமைக்கண் தங்கிற்று உலகு. ) தன்துணை இன்றால் பகைஇரண்டால் தான் ஒருவன் இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று. ) தேறினும் தேறா விடினும் அழிவின்கண் தேறான் பகாஅன் விடல். ) நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க மென்மை பகைவர் அகத்து.
) வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும் பகைவர்கண் பட்ட செருக்கு. ) இளைதுஆக முள்மரம் கொல்க களையுநர் கைகொல்லும் காழ்த்த இடத்து. ) உயிர்ப்ப உளர்அல்லர் மன்ற செயிர்ப்பவர் செம்மல் சிதைக்கலா தார். மருந்து ) மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர் வளிமுதலா எண்ணிய மூன்று.
) மருந்துஎன வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின். ) அற்றால் அளவுஅறிந்து உண்க அஃதுடம்பு பெற்றான் நெடிதுஉய்க்கும் ஆறு. ) அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறுஅல்ல துய்க்க துவரப் பசித்து. ) மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துஉண்ணின் ஊறுபாடு இல்லை உயிர்க்கு.
) இழிவுஅறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும் கழிபே ரிரையான்கண் நோய். ) தீயளவு அன்றித் தெரியான் பெரிதுஉண்ணின் நோயளவு இன்றிப் படும். ) நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல். ) உற்றான் அளவும் பிணிஅளவும் கால மும் கற்றான் கருதிச்