5. இல்வாழ்க்ககை - எளிய உரை
Chapter 6: Class 12 Tamil · TAMIL · TA medium
Read from the source
Complete lesson
. இல்வாழ்க்ககை - எளிய உரை . இல்லறத்தான் மரபான மூவேந்தர்க்கும் நல்லாட்சிக்கு உற்ற துணை யாவான். . துறவிக்கும் வறியவர்க்கும் நிலைதிரிந்தவர்க்கும் இல்லறத்தானே துணை வன். . தென்புலத்தார் நிலத்தெய்வம் விருந்து சுற்றம் தன்குடும்பம் என்ற ஐவகையையும் காக்க. . பழியஞ்சிப் பகுத்துண்ணும் இல்லறத்தானுக்கு வாழ்வு குறையாது; வழியும் நில்லாது. . அன்பும் அறனும் உடைய குடும்பம் நாகரிகமும் நலமும் பெற்று விளங்கும். . அறத்தின்படி குடும்பம் நடத்தினால் அதனை த் துறந்துபோய்ப் பெறுவது என்ன? . இயல்பாகக் குடும்ப வாழ்வு வாழ்பவன் முன்னேற முயல்வார் எல்லாரினும் சிறந்தவன். . பிறரை நெறிப்படுத்தித் தானும் நெறிநிற்கும் இல்வாழ்வே தவத்தினும் ஆற்றல் உடையது. . அறமென்று உறுதிப்பட்டது குடும்ப வாழ்வே; துறவும் பழியில்லாவிட்டால் அறமாகும். . உலகத்தில் மணந்து முறையாக வாழ்பவன் மேலுலகத் தேவராக மதிக்கப்படுவான்.
Related topics
Want this shaped for your exam marks?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →