Samacheer Kalvi · SSLC - English Medium · Tamil · Page 181poem

101. நன்றிஇல் செல்வம் - எளிய உரை

Chapter 39: 10th Tamil · Tamil · TA medium

Read from the source

Complete lesson

. நன்றிஇல் செல்வம் - எளிய உரை இடமெல்லாம் பெரும்பொ ருளை ஈட்டிவை த்து உண்ணாது செத்தவனுக்கு உரிமை யாதுமில்லை. . எல்லாம் பொருளால் ஆகும் என்று கொடாது இறுக்கிய பேதை க்கு இழிபிறப்பு உண்டாகும். . ஈட்டிய பொருளை இறுகப் பற்றிக்கொண்டு புகழ்விட்ட ஆடவர் பூமிக்குப் பாரம். . ஒருவராலும் விரும்ப் படாத கஞ்சன் தனக்குப் பின் என்று எதனை க் கருதுகிறான்? . பிறர்க்கு வழங்கான் தானும் உண்ணான் இவனுக்குப் பலகோடி இருந்தால் என்ன? . தானும் நுகரான் ஏழைக்கும் ஈயான் இவன் பெருஞ்செல்வத்துக்கு ஒரு நோய். . ஏழைக்கு யாதும் ஈயாதவனது செல்வம் அழகுள்ள குமரி மணவாது மூத்து போலும். . யாராலும் விரும்ப் படாதவனது செல்வம் நடுவூரில் நஞ்சுமரம் பழுத்து போலாம். . அன்பின்றித் தன் வாய்வயிற்றைக் கட்டிச் சேர்த்த பொருளை எடுத்துக்கொள்வார் யாரோ? . கொடைச் செல்வர்கள் சிலநாள் வறுமைப்படுதல் மேகம் வறுமைப்படுவது போலும்.

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →