106. இரவு - எளிய உரை
Chapter 39: 10th Tamil · Tamil · TA medium
Read from the source
Complete lesson
. இரவு - எளிய உரை கேட்கத் தக்கவரிடம் உதவி கேட்க; ஒளித்தால் அவர்க்குப் பழி, உனக்கு இல்லை. . கேட்ட பொருள்கள் கடினமின்றிக் கிடைப்பின் உதவி கேட்பதும் மகிழ்ச்சியைத் தரும். . ஒளிக்காத மனமும் கடமையுணர்ச்சியும் உடையவர் முன்நின்று இரத்தலும் ஓர் அழகு. . ஒளிப்பதைக் கனவிலும் அறியாதாரிடம் சென்று கேட்பது கொடுப்பதை ஒக்கும். . நேர்நின்று ஒருவர் இரக்க முற்படுவது ஒளிக்காதவர் உலகத்து இருப்பதால் அன்றோ? . ஒளிக்கும் துயரம் இல்லாரைக் கண்டால் வறுமைத் துயரம் எல்லாம் போய்விடும். . இகழ்ந்து பேசாது கொடுப்பாரைக் கண்டால் உள்ளம் உள்ளுக்குள்ளே மகிழும். . உதவிகேட்பார் இல்லாவிடின் இப்பேருலகம் மரப்பாவைபோல உணர்ச்சியற்று நடக்கும். . இரந்து கொள்ள விரும்புவோர் இல்லாதபோது கொடுப்பவர்க்குப் பெருமிதம் என்ன உண்டு? . இரப்பவனுக்குக் கோபம் வருதல் கூடாது; தான் வறுமைப்படுவதே அதற்குச் சான்று.
Related topics
Want this shaped for your exam marks?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →