36. மெய் உணர்தல் - எளிய உரை
Chapter 39: 10th Tamil · Tamil · TA medium
Read from the source
Complete lesson
. மெய் உணர்தல் - எளிய உரை பொய்ப்பொருள்களை மெய்ப்பொருள் என்று மயங்குவதால் பிறப்புத் தோன்றும். . மயக்கம் விட்டுத் தெளிந்த அறிஞர்களுக்குப் பேதைமை இராது; பேரின்பம் உண்டாகும். . ஐயம் இன்றி உண்மை கண்டவர்களுக்கு வீட்டுலகம் கிட்ட உள்ளது. . உண்மை யுணர்ச்சி இல்லாதவர்களுக்கு ஐம்புல அடக்கம் இருந்தும் பயனில்லை. . ஒரு பொருள் எத்தன்மையதாக இருப்பினும் அதன் உண்மையைக் காண்பதே அறிவு. . இப்பிறப்பில் கற்று உண்மை கண்டவரே திரும்ப் பிறவா வீட்டினை அடைவர். . உள்ளம் உண்மையை உணர்ந்துகொண்டால் பின்னும் பிறப்புண்டோ என்று அஞ்சாதே. . பிறப்பாகிய பேதைமை நீங்குமாறு சிறப்பாகிய பொருளை க் காண்பதே அறிவு. . மெய்ப்பற்றை உணர்ந்து பொய்ப்பற்றை விடின் வருகின்ற நோய்கள் மீறி வாரா. . காமம், சினம், அறியாமை மூன்றும் அடியோடு கெடவே நோயும் கெடும்.
Related topics
Want this shaped for your exam marks?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →