Samacheer Kalvi · SSLC - English Medium · Tamil · Page 178poem

62. ஆள்வினை உடைமை - எளிய உரை

Chapter 39: 10th Tamil · Tamil · TA medium

Read from the source

Complete lesson

. ஆள்வினை உடைமை - எளிய உரை அரிய காரியம் என்று மலை க்க வே ண்டாம்; முயற்சி எல்லாப் பெருமையும் தரும். . எடுத்த வினையை அரைகுறையின்றிச் செய்க: கடமையை விட்டாரை உலகம் விட்டு விடும். . பிறர்க்கு உதவும் பெருமித எண்ணம் உழைக்கின்ற பெரும்பண்பால் உண்டாகும். . உழைப்பில்லாதவன் யார்க்கும் உதவ முடியுமா? பேடி பகைவர்முன் வாள் வீச முடியுமா? . இன்பம் நாடாது காரிய முடிவை நாடுபவன் சுற்றத்தின் துன்பம் தாங்கும் தூணாவான். . உழைப்பு செல்வ நிலையை உண்டாக்கும்: உழையாமை வறுமையைத் தந்துவிடும். . சோம்பேறியின் மடியில் இருப்பாள் மூதேவி உழைப்பவன் அடியில் இருப்பாள் சீதேவி. . உடல் ஊனம் யார்க்கும் பழியில்லை; அறிவை வளர்த்து முயலாமையே பழி. . தெய்வத்தால் ஒரு செயல் முடியாது போகினும் முயன்றால் அதற்குரிய கூலி உண்டு. . சோர்வின்றிக் காலம் தாழ்த்ததாது உழைப்பவர் மாறான விதியும் ஓடக் காண்பர்.

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →