– வழுவமைதி
Chapter 39: 10th Tamil · Tamil · TA medium
Read from the source
Complete lesson
– வழுவமைதி இலக்கண முறை யுடன் பிழை யின்றிப் பேசுவதும் எழுதுவதும் வழாநிலை எனப்படும். இலக்கணமுறையின்றிப் பேசுவதும் எழுதுவதும் வழு எனப்படும். வழு வழாநிலை திணை செழியன் வந்து செழியன் வந்தான் பால் கண்ணகி உண்டான் கண்ணகி உண்டாள் இடம் நீ வந்தேன் நீ வந்தாய் காலம் நேற்று வருவான் நேற்று வந்தான் வினா ஒரு விரலை க் காட்டிச் 'சிறியதோ? பெரியதோ?' என்று கேட்டல் இரு விரல்களைக் காட்டி 'எது சிறியது? எது பெரியது?' என்று கேட்டல் விடை 'கண்ணன் எங்கே இருக்கிறார்?' என்ற வினாவிற்கு, கண்ணாடி பை க்குள் இருக்கிறது என்று விடையளித்தல் கண்ணன் எங்கே இருக்கிறார்? என்ற வினாவிற்கு, கண்ணன் வீட்டிற்குள் இருக்கிறார் என்று விடையளித்தல் மரபு தெ ன்னை மரங்கள் உள்ள பகுதியை த் தென்னந்தோட்டம் என்று கூறுதல் தெ ன்னை மரங்கள் உள்ள பகுதியை த் தென்னந்தோப்பு என்று கூறுதல் வழுவமைதி இலக்கணமுறைப்படி பிழையுடையது எனினும், இலக்கண ஆசிரியர்களால் ஏதேனும் ஒரு காரணம் கருதி, பிழையன்று என ஏற்றுக்கொள்ளப்படுவது வழுவமைதியாகும் . . திணை வழுவமைதி “என் அம்மை வந்தாள்” என்று மாட்டைப் பார்த்துக் கூறுவது திணைவழுவமைதி ஆகும். இங்கு உவப்பின் காரணமாக அஃறிணை, உயர்திணையாகக் கொள்ளப்பட்டது. . பால் வழுவமைதி “வாடா இராசா, வாடா கண்ணா” என்று தன் மகளை ப் பார்த்துத் தாய் அழை ப்பது பால்வழுவமை தி ஆகும். இங்கு உவப்பின் காரணமாகப் பெ ண்பால், ஆண்பாலாகக் கொள்ளப்பட்டது.
Related topics
Want this shaped for your exam marks?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →