யார் இவர்?
Chapter 39: 10th Tamil · Tamil · TA medium
From your actual textbook ✓
What does your textbook say about யார் இவர்??
யார் இவர்? தெருக்கூத்தைத் தமிழ்க்கலையின் முக்கிய அடையாளமாக்கியவர்; “நாடகக்கலையை மீட்டெடுப்பதே தமது குறிக்கோள்” என்றவர் இவர். தமிழ்நாட்டின் வழிவழி நாடகமுறையான கூத்துக்கலையின் ஒப்பனை முறை, கதை சொல்லும் முறைகளையும் எடுத்துக்கொண்டு புதுவிதமான நாடகங்களை உருவாக்கியவர். அதே வேளையில் நாடகத்தில் பயன்படுத்தும் நேரடி இசைமுறையை அறிமுகம்செய்து இசையிலும் மாற்றங்களை நிகழ்த்தியவர். இவரின் நாடகங்கள் பெரும்பாலும் சமூக அரசியல் மாற்றங்களைப் பேசின. இந்தியாவில் மட்டுமன்றி உலகின் பல்வேறு நகரங்களிலும் இவரது நாடகங்கள் நடத்தப்பட்டன. இவர் இந்திய அரசின் தாமரைத்திரு விருதையும் தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதையும் பெற்றவர். இவர்தான் கூத்துப்பட்டறை ந.முத்துசாமி என்ற கலைஞாயிறு.
📖 10th Tamil Textbook · Page 123
Read from the source
Complete lesson
யார் இவர்? தெருக்கூத்தைத் தமிழ்க்கலையின் முக்கிய அடையாளமாக்கியவர்; “நாடகக்கலையை மீட்டெடுப்பதே தமது குறிக்கோள்” என்றவர் இவர். தமிழ்நாட்டின் வழிவழி நாடகமுறையான கூத்துக்கலையின் ஒப்பனை முறை, கதை சொல்லும் முறைகளையும் எடுத்துக்கொண்டு புதுவிதமான நாடகங்களை உருவாக்கியவர். அதே வேளையில் நாடகத்தில் பயன்படுத்தும் நேரடி இசைமுறையை அறிமுகம்செய்து இசையிலும் மாற்றங்களை நிகழ்த்தியவர்.
இவரின் நாடகங்கள் பெரும்பாலும் சமூக அரசியல் மாற்றங்களைப் பேசின. இந்தியாவில் மட்டுமன்றி உலகின் பல்வேறு நகரங்களிலும் இவரது நாடகங்கள் நடத்தப்பட்டன. இவர் இந்திய அரசின் தாமரைத்திரு விருதையும் தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதையும் பெற்றவர். இவர்தான் கூத்துப்பட்டறை ந.முத்துசாமி என்ற கலைஞாயிறு.
. . கட்டுரை எழுதுக. உங்கள் பகுதியில் நடைபெற்ற கலைத்திருவிழாவிற்குச் சென்று வந்த நிகழ்வைக் கட்டுரையாக்குக.
Related topics
Want this shaped for your exam marks?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →