இயல் 6
Chapter 6: Class 12 Tamil · TAMIL · TA medium
From your actual textbook ✓
What does your textbook say about இயல் 6?
சீனத்தில், ’யாங்செள’ என்கிற பகுதியில் பல இளைஞர்கள் நீச்சலில் தீரர்களாக இருந்தனர். அங்கு ஆழமான நதியை இளைஞர்கள் சிலர் படகுமூலம் கடக்கும்போது, மழை ப் பிடிப்புப் பகுதியில் வெள்ளம் ஏற்பட, படகு கவிழ்ந்து. நதியில் விழுந்த அனை வரும் நீச்சலடிக்க ஆரம்பித்தனர். அவர்களுள் மிகச்சிறந்த நீச்சல் வீரன் ஒருவனும் இருந்தான். ஆனால், அவன் அன்று சரியாக நீந்தாமல் தத்தளித்தான். “ ஏன் இவ்வளவு பின்தங்குகிறா ய்? நீ அதிசிறந்த நீச்சல் வீரனாயிற்றே” என்று மற்றொ ருவர் வினவினார். தங்களைக் காட்டிலும் சிறந்த வீரன் தத்தளிப்பது அவருக்கு வியப்பாய் இருந்து. “நான் என்னுடைய கச்சையில் ஆயிரம் பொHொற்காசுகளைக் கட்டிக்கொண்டிருக்கிறேன்.
📖 Class 12 Tamil 2025 Edition www.tntextbooks.in · Page 142
Read from the source
Complete lesson
சீனத்தில், ’யாங்செள’ என்கிற பகுதியில் பல இளைஞர்கள் நீச்சலில் தீரர்களாக இருந்தனர். அங்கு ஆழமான நதியை இளைஞர்கள் சிலர் படகுமூலம் கடக்கும்போது, மழை ப் பிடிப்புப் பகுதியில் வெள்ளம் ஏற்பட, படகு கவிழ்ந்து. நதியில் விழுந்த அனை வரும் நீச்சலடிக்க ஆரம்பித்தனர். அவர்களுள் மிகச்சிறந்த நீச்சல் வீரன் ஒருவனும் இருந்தான்.
ஆனால், அவன் அன்று சரியாக நீந்தாமல் தத்தளித்தான். “ ஏன் இவ்வளவு பின்தங்குகிறா ய்? நீ அதிசிறந்த நீச்சல் வீரனாயிற்றே” என்று மற்றொ ருவர் வினவினார். தங்களைக் காட்டிலும் சிறந்த வீரன் தத்தளிப்பது அவருக்கு வியப்பாய் இருந்து.
“நான் என்னுடைய கச்சையில் ஆயிரம் பொHொற்காசுகளைக் கட்டிக்கொண்டிருக்கிறேன். அதனால்தான் என்னால் வே கமாக நீந்த முடியவில்லை”, “அவற்றைத் தூக்கி எறிந்துவிட்டு, நீந்திக் கரைசே ர்” என மற்றவர்கள் எவ்வளவோ வற்புறுத்தியும் அவற்றைவிட மனமில்லாமல் அவன் தன் அரிய உயிரை நீத்தான். எது, எந்த நேரத்தில் முக்கியம் என்று சரியான முடிவெடுப்பதில்தான் வாழ்வின் வெற்றி அடங்கியிருக்கிறது. அதுவே சிறந்த நேர மே லாண்மை என்பதைத்தான் தொன்மை மிகுந்த இந்தச் சீனக்கதை சொல்கிறது.
வேளாண் மேலாண்மை வேளாண்மையிலும் மே லாண்மைக் கூறுகள் உண்டு. சரியான பயிரை த் தேர்ந்ததெடுத்தல், உரிய நேரத்தில் விதைத்தல், நீர் மே லாண்மையை நெறிப்படுத்துதல், அறுவடை க்குப்பின் பாதுகாத்தல், உரிய விலை வரும்வரை இருப்பு வை த்தல் என்று ஒவ் வொரு கட்டத்திலும் விழிப்புணர்வும் பொH றுப்புணர்வும் நிருவாகநெறியும் இணைந்தால்தான் வேளாண்மைத் தொழில் செழிக்கும். கம்பராமாயணத்தில், தசரதன் தன் நாட்டை மிகவும் செப்பமாகவும் நுணுக்கமாகவும் ஆட்சி செய்தான் என்பதைக் கம்பர், “வையகம் முழுவதும் வறிஞன் ஓம்பும் ஓர் செய் எனக் காத்து இனிதுஅரசு செய்கின்றான்” (பாலகாண்டம்- ) என்கிறார். ‘வறியவன் ஒருவன் தன் சிறு வயலை ப் பாதுகாப்பதுபோHோல, இவ்வுலகம் முழுவதையும் பாதுகாத்து மிகச்சிறந்த முறை யில் ஆட்சி செய்தான்’ என்று அவர் குறிப்பிடுகிறார்.
வேளாண் மேலாண்மையோடு மனதின் செயலை ஒப்பிட்டுப் பின்வரும் பாடல் விளக்குகிறது; “இன்சொல் விளைநிலனா ஈதலே வித்தாக வன்சொல் களைக்கட்டு வாய்மை எருவட்டி அன்புநீர் பாய்ச்சி அறக்கதிர் ஈனஓர் பைங்கூழ் சிறுகாலைச் செய்” (அறநெறிச்சாரம் – ) 'இன்சொல்லை விளைநிலமாக்கி, ஈதலை வித்தாக்கி, வன்சொ ல் களையை நீக்கி, வாய்மையெனும் எருவிட்டு, அன்புநீர் பாய்ச்சி, அறக்கதிர்களை விளைவிக்க வே ண்டும்' என்பது பாடல் கருத்து. வேளா
Related topics
Want this shaped for your exam marks?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →